For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேக்கு காத்திருக்கும் ஆபத்து.. குஜராத் அணியில் ஷமி, ரஷித் கான் அளிக்கும் சவால்..தோனிக்கு தல வலி

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணியை இதுவரை மூன்று முறை எதிர்கொண்ட சிஎஸ்கே அணி அனைத்திலும் தோல்வியை தழுவி இருக்கிறது.

இன்று முக்கிய கட்டத்தில் குஜராத்தை சென்னை அணி எதிர்கொள்கிறது. இந்த நிலையில் குஜராத் அணி பந்து வீச்சு சென்னைக்கு நிச்சயம் தலைவலியை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

IPL Playoffs 2023 - Mohammed shami and Rashid khan gives huge challenge to csk

அந்த அணியில் உள்ள முகமது சமி மற்றும் ரஷீத் கான் சிஎஸ்கே அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி இருக்கிறார்கள். குறிப்பாக முகமது சமி இதுவரை சிஎஸ்கே வீரர்களுக்கு 12 ஓவர்களை வீசி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.இதில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் கான்வேவின் விக்கெட்டை முகமது சமி இரண்டு முறை கைப்பற்றி இருக்கிறார்.முகமது ஷமியின் பந்துவீச்சில் 8 பந்துகளை எதிர்கொண்ட கான்வே, இதுவரை மூன்று ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார்.

IPL Playoffs 2023 - Mohammed shami and Rashid khan gives huge challenge to csk

இதைப்போன்று ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகள் எதிர்கொண்டு 40 ரன்களும், ரஹானே 50 பந்துகளை எதிர் கொண்டு 86 ரன்களும், ராயுடு 22 பந்துகளை எதிர் கொண்டு 32 ரன்களும், சிவம் துபே 9 பந்துகளை எதிர் கொண்டு 11 ரன்களும் மோயின் அலி 26 பந்துகளை எதிர் கொண்டு 28 ரன்களும், ஜடேஜா 12 பந்துகளை எதிர் கொண்டு 19 ரன்களும் ,தோனி 21 பந்துகளை எதிர் கொண்டு 37 ரன்களும் எடுத்திருக்கிறார்கள்.

இதில் ரகானே தவிர மற்ற அனைவரும் சமியிடம் தடுமாறி இருக்கிறார்கள்.இதேபோன்று ரஷித் கானும் சென்னை அணிக்கு பெரிய ஆபத்தை கொடுப்பார். நடப்பு சீசனில் ரஷித் கான் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் மோயின் அலி, இதுவரை நான்கு முறை ரஷித் கான் ஆட்டம் இழக்க வைத்திருக்கிறார். ரசித்தானை சிஎஸ்கே அணி சமாளித்தால் மட்டுமே அவர்களால் வெற்றி பெற முடியும்.

IPL Playoffs 2023 - Mohammed shami and Rashid khan gives huge challenge to csk
Story first published: Tuesday, May 23, 2023, 18:21 [IST]
Other articles published on May 23, 2023
English summary
IPL Playoffs 2023 - Mohammed shami and Rashid khan gives huge challenge to csk
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+