Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டென்ஷனை எகிற வைத்த ரபாடா.. என்ன பவுலிங் இது.. கோபத்தில் பெஞ்சை ஓங்கி அடித்த "பழைய" பாண்டிங்!

துபாய்: நேற்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங் முக்கியமான கட்டத்தில் கோபம் அடைந்தது பெரிய வைரலாகி உள்ளது.

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி திரில்லிங் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய டெல்லி அணி 157 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் கடைசி ஒரு பாலில் ஒரு ரன் அடிக்க வேண்டும் என்ற நிலை வரை போட்டி மிகவும் திக் திக்காக சென்றது.

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 157 ரன்கள் எடுத்து போட்டி டை ஆனது. அதன்பின் சூப்பர் ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே பஞ்சாப் எடுத்து டெல்லியிடம் தோல்வியை தழுவியது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

நேற்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங் முக்கியமான கட்டத்தில் கோபம் அடைந்தது பெரிய வைரலாகி உள்ளது. தொடக்கத்தில் ஆட்டம் முழுக்க முழுக்க டெல்லி அணியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. டெல்லி வீரர்கள் வரிசையாக இதில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் மயங்க் அகர்வால் அதிரடியாக ஆடினார்.

மயங்க் அகர்வால் அதிரடி

மயங்க் அகர்வால் அதிரடி

60 பந்தில் 7 பவுண்டரி 4 சிக்ஸர் என்று மொத்தம் அகர்வால் 89 ரன்கள் எடுத்தார். இதனால் கடைசி கட்டத்தில் இப்படி பஞ்சாப் அணி மீண்டு வந்தது. டெல்லி அணியில் அஸ்வின் வேறு பாதியில் வெளியேறிவிட்டார். இதனால் அந்த அணியின் பவுலிங் கொஞ்சம் சொதப்ப தொடங்கியது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக டெல்லி அணியின் கோச் பாண்டிங் கொஞ்சம் கொஞ்சமாக பதற்றம் அடைய தொடங்கினார்.

பதற்றம் அடைந்தார்

பதற்றம் அடைந்தார்

அதிலும் 19 ஓவரை ரபாடா வீசிய போது பாண்டிங் கடும் கோபம் அடைந்தார்.ஏனென்றால் அந்த ஓவரில் மொத்தம் இரண்டு பவுண்டரிகளை ரபாடா கொடுத்தார். டெத் ஓவர்களை நன்றாக வீசுவார் என்றுதான் பாண்டிங் அவருக்கு ஓவர் கொடுத்தார். ஆனால் அந்த ஓவரில் அகர்வால், ரபாடா பந்துகளை பறக்கவிட்டார். இதில் ரபாடா மொத்தம் 12 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

கடும் கோபம்

கடும் கோபம்

இந்த ஓவரின் 4வது பந்தில் ரபாடா பவுண்டரி ஒன்றை விட்டுக்கொடுத்தார். இதை பார்த்ததும் தனது அறையில் இருந்த பாண்டிங் கோபம் அடைந்தார். இப்போ போய் இப்படி பவுலிங் போடுகிறாரா என்று கடும் கோபம் அடைந்தார். அதோடு தனது கையை வேகமாக அருகில் இருந்த இருக்கையில் அடித்தார். டெத் ஓவர்களில் இப்படி பவுலிங் போடுகிறார் என்று கோபம் அடைந்தார்.

அதே பாண்டிங்

அதே பாண்டிங்

2003ல் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிரான இறுதி போட்டியில் இதேபோல் பாண்டிங் ஆக்ரோஷமாக காணப்பட்டார். தனது அணி வீரர்களை கடுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்தார். அதே பாண்டிங் நேற்று மீண்டும் வெளியே வந்தார். பாண்டிங் கோபம் காரணமாக அதன்பின் வந்த சூப்பர் ஓவரை ஜாக்கிரதையாக வீசிய ரபாடா வெறும் 3 ரன்கள் மடடுமே விட்டுக்கொடுத்தார்.

Story first published: Monday, September 21, 2020, 11:53 [IST]
Other articles published on Sep 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+