Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் சூதாட்டத்தில் 6 இந்திய வீரர்களுக்குத் தொடர்பு....!

டெல்லி: இந்தியாவைச் சேர்ந்த 6 முக்கியவீரர்களுக்கு ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக நீதிபதி முத்கல் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு வீரர் தற்போதும் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஆறு பேருக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் முத்கல் கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர்கள் வெளியிடப்படவி்ல்லை

பெயர்கள் வெளியிடப்படவி்ல்லை

இந்த அறிக்கையில் ஆறு பேர் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளதாம். ஆனால் அந்த ஆறு பேரின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லையாம்.

தனியாக தனிக் கவரில்

தனியாக தனிக் கவரில்

இருப்பினும் இந்த ஆறு பேரின் பெயர்களையும் தனியாக ஒரு பட்டியலில் இட்டு, அதை தனிக் கவரில் வைத்து சீலிட்டு நீதிபதிகளிடம் கொடுத்துள்ளாராம் நீதிபதி முத்கல்.

அடையாளம் காட்டிய பத்திரிக்கையாளர்

அடையாளம் காட்டிய பத்திரிக்கையாளர்

வழக்கமாக பேட்டி காணப் போகும்போது அதை பத்திரிக்கையாளர்கள் டேப் செய்வது வழக்கம். அந்த வகையில் விளையாட்டு வீரர்களிடம் பேட்டி காண்பதிலும், டேப் செய்வதிலும் அனுபவம் வாய்ந்த ஒரு பத்திரிக்கையாளரை வைத்துத்தான் ஆடியோ டேப்பில் இருந்த குரல்களை நீதிபதி குழு அடையாளம் கண்டதாம்.

முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவர்

முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவர்

மேலும் இந்த ஆடியோ டேப்பில் முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஒருவரின் குரலும் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனராம்.

யார் அந்த 6 பேர்

யார் அந்த 6 பேர்

தற்போது யார் அந்த 6 வீரர்கள்.. தற்போதும் இந்திய அணியில் விளையாடி வரும் அந்த நபர் யார் என்பதுகுறித்த எதிர்பார்ப்புகளும், விவாதங்களும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.

Story first published: Wednesday, February 12, 2014, 8:27 [IST]
Other articles published on Feb 12, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+