Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இறுதிப் போட்டிக்கு செல்லப்போவது யார்? குஜராத், மும்பை மோதல்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு?

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி சுற்றில் சி எஸ் கே அணியுடன் மோத போவது யார் என்பது தீர்மானிக்கும் குவாலிபையர் 2 ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு குஜராத் மும்பை அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது. சேசிங்கில் குஜராத் அணி எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்கள். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கடந்த முறை சேஸிங் செய்யும் போது குஜராத் அணி கடுமையாக தடுமாறியது.

IPL Qualifier 2- MI vs GT Playing each other to earn a place in final

மேலும் சென்னை அணிக்கு எதிரான முதல் குவாலிபயர் ஆட்டத்தில் குஜராத் அணி பேட்டிங்கில் கடுமையாக தடுமாறியது. அந்த அணியில் சுப்மன் கில்லை சுற்றி ஒட்டுமொத்த பேட்டிங்கும் சூழல்கின்றது. ஆனால் மும்பை என்னை பொறுத்தவரை அவர்கள் சரியான நேரத்தில் தங்களுடைய பழைய பார்மை மீட்டு இருக்கிறார்கள்.

கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் அவர்கள் நான்கில் வெற்றி பெற்று டாப் ஃபார்மில் இருக்கிறார்கள். மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்கள், பில்டிங் என அனைத்துமே டாப் க்ளாஸில் இருக்கிறது. இதனால் கோப்பையை வெல்லப்போகும் அணி என்ற அந்தஸ்தையும் மும்பை அணி மீண்டும் பெற்று இருக்கிறது.
இதனால் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டம் குஜராத்துக்கு கடும் போட்டியாக இருக்கும்.

எனினும், குஜராத் அணிக்கு இந்த நாக் அவுட் சுற்றில் ஒரு சாதகமான சூழல் நிலவுகிறது. அதாவது குஜராத் அணி தங்களது சொந்த மண்ணான அகமதாபாத் மைதானத்தில் விளையாடுகிறது. இது அவர்களுக்கு பிளஸ் பாயிண்ட் ஆக பார்க்கப்படுகிறது.

மும்பையை வீழ்த்த வேண்டும் என்றால் குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே அது முடியும் இல்லையெனில் ஐபிஎல் தொடரின் ஆண்டைகள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிஎஸ்கே ,மும்பை தான் இறுதிப் போட்டிகளில் விளையாடும்.

Story first published: Thursday, May 25, 2023, 23:38 [IST]
Other articles published on May 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+