Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் குவாலிபையர் 2-கவனிக்கப்பட வேண்டிய 5 வீரர்கள்..கார்த்திக், சஞ்சு சாம்சனை வீழ்த்த திட்டம் என்ன?

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் குவாலிபியர் 2 வின் முக்கிய ஆட்டத்தில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய 5 வீரர்களை குறித்து தற்போது பார்க்கலாம்.

மேலும், ஆட்டத்தை 10 பந்திலேயே மாற்றக் கூடிய சஞ்சு சாம்சன், தினேஷ் காத்திக் ஆகியோரை வீழ்த்த வகுக்கப்பட்டுள்ள திட்டம் குறித்தும் அலசலாம்.

ஜாஸ் பட்லர்

ஜாஸ் பட்லர்

நடப்பு சீசனில் அதிக ரன்கள் அடித்ததற்கான ஆரஞ்ச் நிற தொப்பியை ஜாஸ் பட்லர் தான் கைப்பற்றியுள்ளார். 15 போட்டியில் விளையாடி 718 ரன்களை பட்லர் குவித்துள்ளார். இருப்பினும் பட்லர் இன்று பெரிய ஸ்கோர் அடித்தால் மட்டுமே ராஜஸ்தான் அணிக்கு வெற்றி பெற வாய்ப்பு உண்டு. பட்லருக்கு ஜெய்ஷ்வால், படிக்கல் , ஆகியோர் ஒத்துழைப்பு தர வேண்டிய கட்டாயமும் உள்ளது.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால் குவாலிபையர் 1 ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். அதே போன்ற ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் ஆர்சிபியை சமாளிக்க முடியும். இந்த நிலையில், சஞ்சு சாம்சனை சமாளிக்க ஆர்சிபி திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதில் ஹசரங்காவுட்ம சாம்சனும் 6 முறை விளையாடியள்ளனர். இதில் 5 முறை, சஞ்சு விக்கெட்டை ஹசரங்கா வீழ்த்தி இருக்கிறார். ஹசரங்காவின் 23 பந்துகளை எதிர்கொண்ட சாம்சன் 18 ரன்களே அடித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

ஆர்சிபி அணியின் முக்கிய போட்டிகளில் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் முதன்மையானவர் தினேஷ் கார்த்திக். 15 போட்டியில் விளையாடி 324 ரன்கள் விளாசியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 187 ஆகும். எலிமினேட்டர் போட்டியில் கூட கார்த்திக் ஒரு முக்கிய இன்னிங்சை ஆடினார். இதனால், அவரை கட்டுப்படுத்த ராஜஸ்தான் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதில், சாஹல் பந்துவீச்சை எதிர்கொள்ள தினேஷ் கார்த்திக் கடந்த காலங்களில் தடுமாறி இருக்கிறார். 10 போட்டியில் 3 முறை சாஹல் பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்து இருக்கிறார்.

டுபிளஸிஸ்

டுபிளஸிஸ்

ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்படும் பெரிய போட்டியில் பிக் இன்னிங்ஸ் ஆட க் கூடிய நபர். இருப்பினும் எலிமினேட்டர் ஆட்டத்தில் டக் அவுட்டான டுபிளஸிஸ், இன்றைய ஆட்டத்தில் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சீசனில் 443 ரன்கள் அடித்துள்ள டுபிளஸிஸ் இன்று எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்து தான் ஆர்சிபி அணியின் வெற்றி இருக்கும். இதனால் டுபளிஸிஸ் 20 ஓவர் வரை களத்தில் நின்று விளையாட வேண்டும்.

விராட் கோலி

விராட் கோலி

ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி முக்கிய கட்டத்தில் ஃபார்ம்க்கு திரும்பியுள்ளார். எனினும் தொடர்ந்து ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். நடப்பு சீசனில் 334 ரன்களை குவித்த அவர் 3 முறை கோல்டன் டக் ஆகி இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் விராட் கோலியின் ஸ்பெஷல் இன்னிங்சை எதிர்பார்க்கலாம்.

Story first published: Friday, May 27, 2022, 20:20 [IST]
Other articles published on May 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+