பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி, சிஎஸ்கே அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டத்தில் டாசை இழந்த சிஎஸ்கே அணி, டுபிளசிஸால் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது. பெங்களூரு சின்னசாமி மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் ஆகும்.
இதனால் முதலில் பேட்டிங் செய்யும் சிஎஸ்கே அணி, பெரிய ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சிஎஸ்கே வீரர்கள் எங்கே அடிப்பார்களோ, அங்கே எல்லாம் ஃபில்டர்களை ஆர்சிபி அணி நிற்க வைத்தது. இதனால் பவுண்டரிகள் போக வேண்டிய பந்து சிங்களாக மாறியது.

இதனையடுத்து, சிராஜ் ஓவரை தூக்கி ருதுராஜ் பிளிக் செய்ய , அதனை Deep square Leg திசையில் பவுண்டரி லைனில் கேட்ச் ஆனது. இதனால் 3 ரன்களில் ருதுராஜ் ஆட்டமிழந்தார். ஆரஞ்ச் நிற தோப்பியை வெல்ல ருதுராஜ் போட்டி போட்டு வந்த நிலையில், தற்போது கடைசி 2 இன்னிங்சில் ருதுராஜ் மொத்தமாக 11 ரன்கள் அடித்துள்ளார்.
ருதுராஜ் எப்போது எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டழிந்து விடுகிறாரோ, அப்போது எல்லாம் சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. இதனையடுத்து களத்திற்கு வந்த ரஹானே 2.0, தொடக்கத்தில் இருந்தே கவுண்டர் அட்டாக் ஷாட்டை ஆடினார். முதலில் 2 பந்துகளை அவர் தூக்கி அடிக்க பந்து பவுண்டரி லைனுக்கு கூட போகவில்லை.

இந்த நிலையில் ஆர்சிபி வீரர் விஜயகுமார் வீசிய பந்தை பளார் என்று ரஹானே அறையே, அது மேற்கூரையில் பந்து பட்டு, கீழு விழுந்தது. இந்த சிக்சர் 92 மீட்டர் தூரம் வரை சென்றது. தொடர்ந்து ரஹானே அதிரடியை காட்ட, சிஎஸ்கே அணி பவர்பிளே முடிவில் 53 ரன்களை எடுத்தது. இதில் கான்வே, ரஹானே ஜோடி 2வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.