இங்க வாடா... மைதானத்திலேயே கெட்ட வார்த்தையில் கத்திய கே.எல் ராகுல்.. மைக்கில் பதிவானதால் பரபரப்பு!
துபாய்: நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியின் போது பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல் மிகவும் கோபமாக மைதானத்தில் கெட்ட வார்த்தையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது. கடைசி நொடி வரை திக் திக் என்று சென்ற போட்டி, கடைசி நொடியில் சூப்பர் ஓவர் வரை சென்று அதன்பின் முடிந்தது.
முதலில் ஆடிய டெல்லி அணி 157 ரன்கள் எடுத்தது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 157 ரன்கள் எடுத்து போட்டி டை ஆனது. அதன்பின் சூப்பர் ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே பஞ்சாப் எடுத்து டெல்லியிடம் தோல்வியை தழுவியது.

எப்படி கேப்டன்
இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக கே எல் ராகுல் பொறுப்பேற்று இருந்தார். முதல் முறை கேப்டனாக அவர் பதவி ஏற்று விளையாடினார். முதல் போட்டியே இதில் பல திருப்பங்கள் உடன் இருந்தது. கே எல் ராகுலும் பல நிறை குறைகளோடு இதில் கேப்டன்சி செய்தார்.

எப்படி கேப்டன்சி
பஞ்சாப் அணியின் கோச்சாக கும்ப்ளே தேர்வாகி உள்ளார். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். கே.எல் ராகுலும் கர்நாடகாவை சேர்ந்தவர். அதேபோல் இந்த அணியில் கர்நாடகாவை சேர்ந்த வீரர்கள் பலர் இருக்கிறார்கள். கருண் நாயர், மயங்க் அகர்வால், கிரிஷ்ணப்பா கவுதம் போன்ற பிளேயிங் லெவனிலேயே 4 கர்நாடக வீரர்கள் இருந்தனர்.

என்ன பேசினார்
இதனால் வீரர்களிடம் பெரும்பாலும் கன்னடத்திலேயே கே எல் ராகுல் பேசினார். பெரும்பாலான வீரர்களுக்கு கன்னடம் புரியும் என்பதால் அவர்களிடம் அதிலேயே பேசினார். இதனால் எதிரணி வீரர்களையும் எளிதாக குழப்ப முடியும். இந்த நிலையில்தான் நேற்று நடந்த போட்டியில் கே எல் ராகுல் கெட்ட வார்த்தையில் பேசினார் .

சொன்னது என்ன
பீல்டிங் செட் செய்து கொண்டு இருந்த போது வீரர்களை பார்த்து, இங்க வாடா என்று கூறி அதோடு சேர்த்து சில கெட்ட வார்த்தைகளையும் குறிப்பிட்டார். இரண்டு, மூன்று முறை இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தினார். கோபமாக பல இடங்களில் வீரர்களை திட்டினார்.

பதிவானது
அதோடு, இவர் பேசியது மைக்கில் பதிவானது. இதை கேட்ட வர்ணனையாளர்கள் சிரித்தனர். அதோடு கே எல் ராகுல், தான் பேசிய கெட்ட வார்த்தையை கை அசைவில் செய்து காட்டினார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications