Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹாட்ரிக்கை தவறவிட்ட குஜராத் அணி.. டெல்லியை தாக்கிய ரஷித் புயல்.. தட்டு தடுமாறி 162 ரன்கள் எடுத்தது

டெல்லி : ஐபிஎல் தொடரில் 7வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், குஜராத் அணியும் பலப்பரீச்சை நடத்தியது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து டேவிட் வார்னர், பிரித்வி ஷா ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா 7 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க டெல்லி அணி தடுமாறியது. இதனையடுத்து டேவிட் வார்னர் மற்றும் சர்பிராஸ் கான் ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. பவர்பிளேவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.

IPL - Rashid khan and Mohammed shami brilliant spell restricts delhi in to 162

டெல்லி அணி செட்டலாகி பெரிய ஸ்கோர் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அல்சாரி ஜோசர் ஒரே ஓவரில் ஆட்டத்தை குஜராத்துக்கு சாதகமாக மாற்றினார். டேவிட் வார்னரை 37 ரன்களிலும், ரூசோவ் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெல்லி அணி தப்பியது. ரிஷ்ப் பண்ட்க்கு பதிலாக சேர்க்கப்பட்ட அபிஷேக் போரேல் அதிரடியாக சிக்சர்களை எல்லாம் அடித்தார். அப்போது மீண்டும் டெல்லி அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது.

IPL - Rashid khan and Mohammed shami brilliant spell restricts delhi in to 162

அப்போது பந்துவீச வந்த ரஷித் கான், தன்னுடைய லாவகமாக பந்து வீசி, டெல்லி அணியை நெருக்கடிக்கு ஆளாக்கனார். நிதானமாக விளையாடிய சர்பிராஸ் கான் 30 ரன்களிலும், அபிஷேக் போரேல் 20 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டெல்லி அணி தடுமாறியது. இறுதியில் அக்சர் பட்டேல் மட்டும் 3 சிக்சர்களை விளாசி 36 ரன்களை சேர்க்க டெல்லி அணி 162 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை எட்டியது.

Story first published: Tuesday, April 4, 2023, 22:09 [IST]
Other articles published on Apr 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+