Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

111 மீட்டர் தூரத்தில் பறந்த சிக்சர்.. மைதானத்திற்கு வெளியே சென்ற பந்து.. சிவம் துபே வெறித்தனம்

பெங்களூரு : ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வீரர் துபே 111 மீட்டர் தரத்தில் சிக்சர் அடித்து பட்டையை கிளப்பினார். டாஸ் வென்ற ஆர்சிபி அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து, 200 ரன்களுக்கு மேல் அடித்தாலும் சின்னசாமி மைதானத்தில் வெற்றி உறுதி இல்லை என்பதால், சிஎஸ்கே வீரர்கள் அதிரடியாக விளையாட வேண்டிய உத்வேகத்தில் விளையாடினர். ஆனால், அவர்களுக்கு பெரிய இடியாக ருதுராஜ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

IPL RCB vs CSK - Shivam dube hits 111 Meter monstrous sixer

இதனையடுத்து, கான்வே மற்றும் ரஹானே ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி, ஆர்சிபி பந்துவீச்சை சிதறடித்தனர். ரஹானே, காட்டு தனமாக பவுண்டரிகளையும், சிக்சர்களை அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் கொண்டு சென்றார். 20 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே 37 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்சர்களையும், 3 பவுண்டரிகளையும் அடங்கும்.

மறுபுறம் கான்வே 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனையடுத்து 4வது வீரராக களத்திற்கு வந்த சிவம் துபே, வெறித்தனமாக விளையாடினார். அவருடைய ஷாட் எல்லாம் யுவராஜ் சிங்கை ரசிகர்கள் கண் மூன் கொண்ட வந்து நிறுத்தியது. முதலில் 102 தூரத்தில் ஒரு சிக்சர் அடித்தார்.

இதனையடுத்து சிறிது நேரத்திலேயே 111 மீட்டர் தூரத்தில் சிக்சரை சிவம் துபே அடித்தார். அந்த பந்து மைதானத்திற்கு வெளியே சென்றது சிவம் துபே அடித்த சிக்சரை பார்த்து, கேவின் பீட்டர்சன் இதற்கு 12 ரன்கள் கொடுக்க வேண்டும் என்று கூறினார். 27 பந்தில் 52 ரன்களை துபே விளாசினார். இதில் 5 சிக்சர், 2 பவுண்டரிகள் அடங்கும்.

Story first published: Monday, April 17, 2023, 20:59 [IST]
Other articles published on Apr 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+