சிஎஸ்கே கேப்டன் பதவியை துறந்தார் தோனி.. புதிய கேப்டனாக ஜடேஜா அறிவிப்பு.. திடீர் முடிவு ஏன்?
சென்னை: ஐபிஎல் 15வது சீசன் தொடங்க இன்னும் 48 மணி நேரமே உள்ள நிலையில், சிஎஸ்கே கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியுள்ளார்.
Recommended Video
தோனியின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில், புதிய கேப்டனாக ஜடேஜா செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தோனி போன்ற பெரும் ஜாம்பவானின் இடத்தை வேறு எந்த கொம்பனாலும் நிரப்ப முடியாத நிலையில் ஜடேஜா என்ன செய்யப்போகிறார் என்பதை தற்போது பார்க்கலாம்.

காரணம் என்ன
தோனிக்கு தற்போது வயது 40 ஆகி விட்டது. இதனால் அடுத்த சீசனில் விளையாடுவது கடினமே. இந்த நிலையில், அடுத்த சீசனில் ஜடேஜாவை கேப்டனாக நியமித்தால், அவருக்கு களத்தில் உதவ தோனி இருக்க மாட்டார். இதனால் ஜடேஜாவை கேப்டனாக தயார் படுத்த தோனி தற்போதே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

நல்ல வாய்ப்பு
இதன் மூலம் நெருக்கடியான சமயத்தில் எப்படி அணியை வழிநடத்த வேண்டும். ஃபில்டர்களை எப்படி நிறுத்த வேண்டும் போன்ற யுத்திகளை நடப்பு சீசனிலேயே களத்தில் ஜடேஜாவுக்கு தோனி உதவி செய்ய நல்ல வாய்ப்பாக அமையும். இதனால் தான் சீசன் தொடக்கத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்பு
ஜடேஜாவும், கடந்த 13 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். வார்னேவால் ராக் ஸ்டார் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஜடேஜா பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் தற்போது கலக்கி வருகிறார். இதனால் கேப்டன் பொறுப்பு அவருக்கு கௌரவத்தையும், சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஊக்கத்தையும் நிச்சயம் தரும்.

சாதகம்
ஜடேஜா ஒரு பந்துவீச்சாளர் என்பதால் பேட்ஸ்மேனை அவுட்டாக்க எப்படி ஃபில்டர்களை நிறுத்த வேண்டும் என்று நன்கு தெரியும். இதனால் கபில்தேவ் போல் ஒரு சிறந்த கேப்டனாக ஜடேஜாவால் செயல்பட முடியும். நெருக்கடியான கட்டத்தில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் செயல்பட்டுள்ளதால், அவருக்கு நெருக்கடியை கையாள்வதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது. களத்தில் தோனியும் நிற்பதால் அவருக்கு யானை பலம் இருக்கும்.


Click it and Unblock the Notifications