IPL ரெக்கார்ட்ஸ் - 2008 முதல் 2022 வரை வளர்ந்து வரும் வீரர்களுக்கான விருதுகளை வென்றவர்கள் யார்?
மும்பை : ஐபிஎல் தொடரில் நோக்கமே வாய்ப்பும் திறமையும் ஒன்றிணையும் இடம் என்பதுதான். திறமை இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தங்களது வாழ்க்கையை மாற்றி இருக்கிறார்கள். ஒரு வாய்ப்புக்காக ஏங்கும் வீரர்கள் ஐபிஎல் தொடர் மூலம் கட்டியாக பிடித்துக் கொண்டு நட்சத்திர அந்தஸ்தை பெறுகிறார்கள்.
இந்த நிலையில் ஒவ்வொரு தொடரிலும் இளம் வீரர்களுக்கு வளர்ந்து வரும் வீரருக்கான விருது வழங்கப்படும். அந்த வீரர்கள் இந்தியாவுக்காக 20 ஒரு நாள் போட்டிகளுக்கு மேலும் 5 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேலும் விளையாடி இருக்கக் கூடாது.கடந்த தொடர்களின் இந்த விருதுக்காக பரிந்துரை செய்ய ப்பட்டிருக்கக் கூடாது வயதுவரம்பு என பல்வேறு விதிகள் விதிக்கப்பட்டிருக்கும்.

இதில் 2008 ஆம் ஆண்டு முதல் விருதை அண்டர் 19 வீரராக இருந்த ஸ்ரீவாட்ஸ் கோஸ்வாமி வென்றார். இவர் விராட் கோலியின் அண்டர் 19 அணியில் விக்கெட் கீப்பராக இருந்த நிலையில் ஆர்சிபி அணிக்காக முதல் ஆண்டு சிறப்பாக விளையாடினார்.2008 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜஸ் அணி சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்த ரோகித் சர்மா வென்றார்.

2010 ஆம் ஆண்டு மும்பை அணியின் அதிரடி வீரர் சௌரப் திவாரி இந்த விருதை வென்றார். 2011 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியின் இக்பால் அப்துல்லாவும், 2012 ஆம் ஆண்டு பஞ்சாப் அணியின் மந்திப் சிங்கும் இந்த விருதை வென்றிருக்கிறார்கள்.ராஜஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராக விளையாடிய சஞ்சு சாம்சன், 2013 ஆம் ஆண்டு வளர்ந்து வரும் வீரருக்கான விருதை கைப்பற்றினார். 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் விளையாடிய அக்சர் பட்டேல் வளர்ந்து வரும் இதற்கான விருதை வென்றார்.

2015 ஆம் ஆண்டு டெல்லி அணியில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயரும், 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்காக விளையாடிய வங்கதேச வீரர் முஸ்தபிர் ரஹ்மான் இந்த விருதை கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த விருதை வென்ற ஒரே வெளிநாட்டு வீரர் என்ற பெருமையும் அவருக்கு தான் சேரும்.
2017 ஆம் ஆண்டு குஜராத் அணிக்காக விளையாடிய பாஸில் தம்பியும், 2018 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக அதிரடியாக விளையாடிய சுப்மன் கில்லும் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை கைப்பற்றி இருக்கிறார்கள்.

2019 ஆம் ஆண்டு கே கே ஆர் அணிக்காக தொடக்க வீரராக விளையாடிய சுப்மன் கில்லும், 2020 ஆம் ஆண்டு ஆர் சி பி அணியின் தொடக்க வீரராக விளையாடிய தேவ்தட் படிக்கல்லும் வளர்ந்து வரும் வீரத்திற்கான விருதை வென்றிருக்கிறார்கள். 2021 ஆம் ஆண்டு அதிக ரன்கள் அடித்து சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு உதவிய ருத்ராஜ் கெய்க்வாட்டும், 2022 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கும் இந்த விருதை வென்றிருக்கவென்றார்.


Click it and Unblock the Notifications