Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது அராஜகத்தின் உச்சம்.. மும்பை வான்கடே மைதானத்தில் திடீர் ரூல்ஸ்.. CSK ரசிகர்களுக்கு கட்டுப்பாடு

மும்பை : ஐபிஎல் தொடரில் எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் மும்பை, சென்னை சூப்பர் அணிகள் மோதும் ஆட்டடத்தை தான் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

தோனிக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம் உண்டு. கடந்த முறை மும்பையில் இரு அணிகளும் விளையாடிய போது, சிஎஸ்கே ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மும்பை வான்கடே மைதானமே மஞ்சள் நிறத்தில் காட்சி அளித்தது. இதே போன்று ஆர்சிபி விளையாடும் ஆட்டத்திற்கும் விராட் கோலி ரசிகர்கள் மும்பையை ஆக்கிரமித்து விட்டார்கள்.

 IPL - Restrictions for other Team fans in Mumbai wankhade stadium

இதனால் கடுப்பான நிதா அம்பானி, தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் மற்ற ரசிகர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டம் போட்டார். அதன் படி, MI FAN ZONE என்று இரண்டு கேலரிகளை மும்பை ரசிகர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மற்ற அணி ரசிகர்கர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 IPL - Restrictions for other Team fans in Mumbai wankhade stadium

MI FAN ZONE பகுதியில் வெறும் மும்பை அணி ஜெர்சியை மட்டும் தான் அணி தான் வர வேண்டும் என்றும், வேறு அணி ஜெர்சியை அணிந்து வரக் கூடாது என்றும் வேறு நிறத்தில் டிசர்ட் போடக்கூடாது என்று மும்பை அணி நிர்வாகம் கூறியுள்ளது. இதன் மூலம் மும்பையில் நடைபெறும் ஐபில் போட்டியை மற்ற அணி ரசிகர்கள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மற்ற அணி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, April 7, 2023, 13:41 [IST]
Other articles published on Apr 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+