Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெகா அப்டேட்! செப்.19 மீண்டும் ஐபிஎல்.. அக்.10 ஃபைனல் - ரசிகர்கள் செம ஹேப்பி

மும்பை: நிறுத்தப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் மீண்டும் செப்.19ம் தேதி அமீரகத்தில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வீசி வரும் கொரோனா 2வது அலை காரணமாக, ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட, பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா உறுதியானது.

பிறகு, சன்ரைசர்ஸ் வீரர் சாஹா, மேலும் சில கொல்கத்தா அணி வீரர்கள் என்று கொரோனா அடுத்தடுத்து பரவ மறுதேதி குறிப்பிடாமல் ஐபிஎல் தொடரை ஒத்திவைத்தது பிசிசிஐ. இன்னும் 31 ஆட்டங்கள் மீதமுள்ளன.

 அக்.10 பைனல்

அக்.10 பைனல்

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்.19 அல்லது செப்டம்பர் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்றும், அக்டோபர் 10ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் ஸ்போர்ட்ஸ் டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இந்த 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படுமாம்.

 பத்திரிகையாளர் தகவல்

பத்திரிகையாளர் தகவல்

அதேபோல் 7 single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளதாகவும், பிசிசிஐ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்ததாகவும் விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜூம்தார் ஸ்போர்ட்ஸ் டுடே யூடியூப் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

 வீரர்கள் குவாரண்டைன்

வீரர்கள் குவாரண்டைன்

மேலும், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான தேதியில் மாற்றம் செய்ய பிசிசிஐ விடுத்த கோரிக்கையும் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்து டூர் முடிந்த பிறகு, வீரர்கள் அமீரகத்தில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பிறகு விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நான்கைந்து நாட்கள் முன்னதாகவே

நான்கைந்து நாட்கள் முன்னதாகவே

அதுமட்டுமின்றி, ஆகஸ்ட் 28 முதல் செப்.19 வரை அமீரகத்தில் கரீபியன் பிரீமியர் லீக் நடைபெற உள்ளது. இப்போது அதன் தேதிகளில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, நான்கில் இருந்து ஐந்து நாட்கள் முன்னதாகவே தொடரை முடித்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம். அதேசமயம், அமீரகத்தில் நடைபெறுவதாக கூறப்பட்ட டி20 உலகக் கோப்பை தொடர் குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

Story first published: Tuesday, May 25, 2021, 20:10 [IST]
Other articles published on May 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+