Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மினி ஏலம்.. எந்த அணியிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? அதிக தொகை வைத்திருப்பது யார்?

மும்பை : ஐபிஎல் 2023 தொடர்களுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் 10 அணிகளும் எந்த வீரர்களை விடுவிக்கிறோம், எந்த வீரர்களை தக்க வைக்கிறோம் என்பது குறித்து பிசிசிஐயிடம் தங்களது இறுதி பட்டியலை அனுப்பி உள்ளது.

அதன்படி தற்போது மினி ஏலத்தில் எந்த அணிக்கு எவ்வளவு தொகை மிச்சம் இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

அதிகபட்ச தொகை

அதிகபட்ச தொகை

ஹைதராபாத் அணி தங்களது முக்கிய வீரர்களான நிக்கோலஸ் பூரான் மற்றும் வில்லியம்சனை விடுவித்ததால் அந்த அணியிடம் தற்போது 42 கோடியே 25 லட்சம் ரூபாய் இருக்கிறது. இதன் மூலம் அந்த அணி மினி ஏலத்தில் தங்களுக்கு பிடித்த வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்கலாம். இதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் அணியிடம் 32 கோடியே 20 லட்சம் ரூபாய் மிஞ்சி இருக்கிறது.

லக்னோ அணி

லக்னோ அணி

ஓடியன் ஸ்மித், மாயன் அகர்வால் ஆகியோரை விடுவித்ததால் அந்த அணியிடம் இவ்வளவு பணம் மிச்சம் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக லக்னோ அணியிடம் 23 கோடியே 35 லட்சம் ரூபாய் மிச்சம் இருக்கிறது. ஆண்டிரு டை, அன்கித் ராஜ், சமீரா, ஜெசன் ஹோல்டர், மனிஷ் பாண்டே ஆகியோரை விடுவித்துள்ளதால் அந்த அணி தற்போது மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.

மும்பை, சிஎஸ்கே அணி

மும்பை, சிஎஸ்கே அணி

இதற்கு அடுத்தபடியாக மும்பை அணி இடம் 20 கோடியே 55 லட்சம் ரூபாய் மிச்சம் இருக்கிறது. இதனை வைத்து மும்பை அணி சுழற் பந்துவீச்சாளர்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சிஎஸ்கே அணியிடம் 20 கோடியே 45 லட்சம் ரூபாய் இருக்கிறது. இதனை வைத்து சிஎஸ்கே பிராவோவுக்கு மாற்றான வீரரை தேர்வு செய்யலாம். இதேபோன்று டெல்லி அணியிடம் 19 கோடியே 45 லட்சம் ரூபாய் மிச்சம் இருக்கிறது.சர்துல் தாக்கூர், கே எஸ் பாரத் ,மந்திப் சிங் உள்ளிட்ட வீரர்களை அவர்கள் விடுவித்துள்ளனர்.

குஜராத் அணி

குஜராத் அணி

இதேபோன்று நடப்பு சாம்பியன் ஆன குஜராத் அணியிடம் 19 கோடியே 25 லட்சம் ரூபாய் மிச்சம் இருக்கிறது. குஜராத் அணி டோமினிக் டிராக்ஸ், ஜேசன் ராய் , வருண் அரோன் ஆகியோரை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணி13 கோடியே 20 லட்சம் ரூபாய் கையிருப்புடன் ஐபிஎல் மினி ஏலத்தை அணுகவுள்ளது. ஜிம்மி நீஷம் , நாதன் கொல்டர் நைல்,வெண்டர் டுசன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களை ராஜஸ்தான் அணி விடுவித்துள்ளது.

ஆர்சிபி, கொல்கத்தா

ஆர்சிபி, கொல்கத்தா

ஆர் சி பி அணியிடம் எட்டு கோடியே 75 லட்சம் ரூபாய் மட்டும்தான் மிச்சமிருக்கிறது. அந்த அணி ஜெசன் பெகுரண்டிராப், லவ்லி சிசோதியா , ருத்தர்போர்டு ஆகிய வீரர்களை விடுவித்து இருக்கிறது. ஐபிஎல் மினி ஏலத்தில் குறைந்தபட்ச தொகையுடன் கொல்கத்தா அணி இருக்கிறது. அந்த அணியிடம் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் தான் மிஞ்சி இருக்கிறது. ஏலத்துக்கு முன்பே மூன்று வீரர்களை தேர்வு செய்துள்ளதால் அந்த அணியிடம் தற்போது தொகை குறைவாக உள்ளது.

Story first published: Tuesday, November 15, 2022, 21:16 [IST]
Other articles published on Nov 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+