Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Retention 2023 - எந்த சேனலில் பார்ப்பது? எத்தனை மணிக்கு ? முழு விடுவிப்பு பட்டியல் எப்போது?

மும்பை : டி20 உலககோப்பை முடிந்து 2 நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் அடுத்த கிரிக்கெட் விருந்து ரசிகர்களுக்கு காத்துள்ளது.

ஐபிஎல் 2023ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில், எந்த வீரர்களை விடுவிப்பது, எந்த வீரர்களை டிரான்ஸ்பர் செய்து கொள்வது என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடைசி நாள்

கடைசி நாள்

இன்று மாலை 5 மணிக்குள் பிசிசிஐயிடம் ஐபிஎல் அணிகள் யாரை வைத்து கொள்கிறோம், யாரை விடுவிக்கிறோம் என்பது குறித்து பிசிசிஐயிடம் தெரிவிக்க வேண்டும். தற்போது வரை டெல்லி அணி ஷர்துல் தாக்கூரை , கொல்கத்தா அணிக்கு Transfer செய்துள்ளது. இதே போன்று குஜராத் அணியிடம் இருந்து பெகுர்சன் மற்றும் குர்பாசை, கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.

டிரான்ஸ்பர்

டிரான்ஸ்பர்

இதே போன்று மும்பை அணி, ஜேசன் பெகுரண்டாப்பை பெங்களூரு அணியிடமிருந்து வாங்கியுள்ளது. ராகுல் திவாட்டியா மற்றும் சாய் கிஷோரை வாங்கி கொண்டு, ஜடேஜாவை தருமாறு குஜராத் அணி கொடுத்த Offer ஐ சிஎஸ்கே நிராகரித்துள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி ஆடம் மிலின், பிராவோ மற்றும் கிறிஸ் ஜார்டனை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

பஞ்சாப் அணியை பொறுத்தவரை ஷாரூக்கான் மற்றும் மாயங் அகர்வாலை விடுவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. லக்னோ அணி மணிஷ் பாண்டேவையும், கேகேஆர் அணி சிவம் மவியையும்,ஐதராபாத் அணி வில்லியம்சனையும், மும்பை அணி பொலார்ட்டையும் விடுவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எந்த சேனல்?

எந்த சேனல்?

எனினும் இன்று மாலை 5 மணி முடிவில் எந்த அணி எந்த வீரர்களை விடுவிக்க உள்ளது என்ற பட்டியலை பிசிசிஐயிடம் தெரிவிக்கும். இதனைத் தொடர்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் மாலை 6 மணிக்கு ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்கள் பட்டியல் குறித்து தகவல் வெளிவரும்.

Story first published: Tuesday, November 15, 2022, 14:45 [IST]
Other articles published on Nov 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+