Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Retention 2025- CSK, MI உள்ளிட்ட அனைத்து அணிகளும் எத்தனை வீரர்களை தக்க வைத்துள்ளது.. முழு விவரம்

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தற்போது அறிவித்திருக்கிறது. சில அணிகள் அதிகபட்சமாக 6 வீரர்களையும், குறைந்தபட்சம் 2 வீரர்களையும் தக்க வைத்து கொண்டுள்ளது. ஒவ்வொரு அணியும் தக்க வைத்துள்ள வீரர்களை தற்போது பார்க்கலாம்.

ipl retention ipl 2025 csk mumbai indians players list

சிஎஸ்கே அணி ருதுராஜ்க்கு 18 கோடி, பதிரானாவுக்கு 13 கோடி, சிவம் துபே 12 கோடி, ஜடேஜா 18 கோடி, தோனி 4 கோடி

ஆர்சிபி அணியின் விராட் கோலி, ரஜத் பட்டிதர் மற்றும் யாஷ் தயாள் ஆகிய மூவரும் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக விராட் கோலிக்கு ரூ.21 கோடி ஒப்பந்தமும், ரஜத் பட்டிதர்-க்கு ரூ.11 கோடி ஒப்பந்தமும், யாஷ் தயாளுக்கு ரூ.5 கோடி ஒப்பந்தமும் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா (18 கோடி), சூர்யகுமார் யாதவ் (16.35 கோடி), ஹர்திக் பாண்டியா (16.35 கோடி), ரோஹித் சர்மா (16.30 கோடி), திலக் வர்மா (8 கோடி) தக்க வைக்கப்பட்டனர்.

கேகேஆர் அணி தரப்பில் ரிங்கு சிங் ரூ.13 கோடி, வருண் சக்கரவர்த்தி ரூ.12 கோடி, சுனில் நரைன் ரூ.12 கோடி, ரஸல் ரூ.12 கோடி, ஹர்சித் ராணா ரூ.4 கோடி, ரமன்தீப் சிங் ரூ.4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளனர்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் : பாட் கம்மின்ஸ் (18 கோடி), அபிஷேக் சர்மா (14 கோடி), நிதிஷ் ரெட்டி (6 கோடி), ஹென்ரிச் கிளாசன்(23 கோடி), டிராவிஸ் ஹெட் (14 கோடி)

குஜராத் டைட்டன்ஸ் : ரஷித் கான் (18 கோடி),சுப்மன் கில் (16.50 கோடி), சாய் சுதர்சன்(8.50 கோடி), ராகுல் தேவாட்டியா (4 கோடி) , ஷாரூக்கான்(4 கோடி)

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரான் (21 கோடி ரூபாய்), ரவி பிஸ்னாய் (11 கோடி ரூபாய்), மாயங் யாதவ் (11 கோடி),மோஷின் கான் (4 கோடி ரூபாய்), ஆயுஷ் பதோனி ( 4 கோடி)

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (18 கோடி ரூபாய்), ஜெய்ஸ்வால் (18 கோடி ரூபாய்), ரியான் பராக் (14 கோடி ரூபாய்), துரூவ் ஜூரல் (14 கோடி), ஷிம்ரன் ஹெட்மயர் (11 கோடி ), சந்தீப் சர்மா ( 4 கோடி ரூபாய்)

பஞ்சாப் கிங்ஸ் : ஷாசாங் சிங் (5.5 கோடி), பிராப்சிம்ரன் சிங் (4 கோடி ரூபாய்)

டெல்லி கேபிட்டல்ஸ்: அக்சர் பட்டேல் (16 கோடியே 50 லட்சம்), குல்தீப் யாதவ் (13 கோடியே 25 லட்சம்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ( 10 கோடி), ( அபிஷேக் போரெல் (4 கோடி)

Story first published: Thursday, October 31, 2024, 19:18 [IST]
Other articles published on Oct 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+