கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா சீசன் நடப்பாண்டு இறுதியில் நடைபெறுகிறது. இந்த மெகா சீசனுக்கு முன்பு பல அணிகள் பல வீரர்களை மாற்ற இருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி டெல்லி அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பந்த் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர இருப்பதாக வதந்திகள் கிளம்பின.
இன்னும் இது குறித்து ஏற்கனவே நமது மைக்கேல் தனத்தில் அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்று தெரிவித்திருந்தோம். இந்த நிலையில் மைக்கேல் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள டெல்லி அணியின் இயக்குனர் கங்குலி இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்து பேசி அவர், டெல்லி அணி ரிஷப் பண்டை தக்க வைக்க முடிவு செய்திருக்கிறது. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இதனால் பண்ட் வேறு எந்த அணிக்கும் செல்ல மாட்டார். பயிற்சியாளர் விஷயத்தில் நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் இன்னும் ரிக்கி பாண்டிங்கிடம் பேசவில்லை. டெல்லி அணி நிர்வாகிகள் இந்திய பயிற்சியாளர்களை பணியமர்த்த யோசித்து வருகிறார்கள்.
தற்போது வரை அந்தப் பணியில் நான் அமர்வது குறித்து யோசிக்கவில்லை. இந்திய பயிற்சியாளராக இருந்தால் போட்டிகள் இல்லாத நேரத்தில் கூட வீரர்களை அழைத்து அவர்களை தயார் படுத்த முடியும். இளம் வீரர்களின் குறையை நிவர்த்தி செய்ய முடியும். இதற்காகத்தான் இந்திய பயிற்சியாளர்களை டெல்லி நிர்வாகம் தேடுகிறது.
இந்தியாவில் அதிக நேரம் தங்க வெளிநாட்டு பயிற்சியாளர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று கங்குலி கூறியுள்ளார்.கங்குலியின் இந்த பேட்டி மூலம் ரிஷப் பண்ட், டெல்லி அணியில் தான் தொடரப் போகிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. இதுவரை டெல்லி அணி ஐபிஎல் இறுதிப் போட்டி வரை சென்றும் ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வாங்கவில்லை.