Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Retention 2025: 10 அணிகளிலிருந்து நீக்கப்பட்ட ஸ்டார் வீரர்கள் விவரம்-எந்த அணிக்கு செல்ல வாய்ப்பு

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தற்போது அறிவித்திருக்கிறது. இந்த சூழலில் 10 அணிகளும் பல ஸ்டார் வீரர்களை அதிரடியாக நீக்கி இருக்கிறது. இதன் மூலம் இந்த வீரர்கள் ஆர் டி எம் கார்டு மூலம் தேர்வு செய்யப்படவில்லை என்றால் வேறு அணிகளுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் எந்த அணி எந்தெந்த வீரர்களை நீக்கி இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை கான்வே, ரச்சின் ரவீந்தரா, தீபக்சாகர் துசார் தேஷ்பாண்ட் போன்ற ஸ்டார் வீரர்களை நீக்கியிருக்கிறது.

ipl retention ipl 2025 csk mumbai indians players list

தற்போது சிஎஸ்கே அணிக்கு ஒரு ஆர்டிஎம் கார்டு மட்டும் தான் இருப்பதால் இதிலிருந்து ஒரு வீரர்களை அவர்கள் மீண்டும் தேர்வு செய்யலாம். டெல்லி அணியை பொறுத்தவரை அதிரடி வீரர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். ரிஷப் பண்ட், டேவிட் வார்னர், ஆண்டிரிச் நோக்கியா போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

மேலும் டெல்லி அணி கைவசம் இரண்டு ஆர் டி எம் கார்டு இருக்கின்றது. குஜராத் அணியை பொறுத்தவரை முகமது சமி, டேவிட் மில்லர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் குஜராத் அணியிடம் ஒரு ஆர்டிஎம் கார்டு கைவசம் இருக்கிறது. நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி ஸ்ரேயாஸ் ஐயர், ஸ்டார்க்,பில் ஷார்ட், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ரானா போன்ற வீரர்களை நீக்கி இருக்கிறார்கள்.

அவர்களிடம் எந்த ஆர் டி எம் கார்டும் இல்லாததால் இந்த வீரர்கள் அனைவரும் வேறு அணிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. லக்னோ அணியை பொறுத்தவரை கே எல் ராகுல், குயின்டன் டிகாக், மார்கஸ் ஸ்டோனிஷ், குர்னல் பாண்டியா போன்ற வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள் . அவர்களிடம் கைவசம் ஒரு ஆர்டிஎம் கார்டு மட்டுமே இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பொறுத்தவரை யாருமே எதிர்பார்க்காத வகையில் ஜாஸ் பட்லர், ட்ரண்ட் பவுல்ட், அஸ்வின், சாகல் ஆகியோரை நீக்கி இருக்கிறார்கள். அவர்களிடம் கைவசம் எந்த ஆர்டிஎம் கார்டும் இல்லாததால் இந்த நான்கு வீரர்கள் வேறு அணிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி இசான் கிஷன், டிம் டேவிட் ஆகியோரை நீக்கி இருக்கிறது. அவர்களிடம் கைவசம் ஒரு ஆர்டிஎம் கார்டு இருக்கிறது.

பஞ்சாப் அணியை பொறுத்தவரை ஹர்சல் பட்டேல், ஆர்ஸ்தீப் சிங், சாம் கரண், ஜான் பாரிஸ்டோ, லியோன் லிவிங் ஸ்டோன் ஆகிய வீரர்கள் அதிரடியாக நீக்கி இருக்கிறது. எனினும் அவர்கள் கைவசம் நான்கு RTM கார்டு இருப்பதால் இதில் நான்கு வீரர்களை அவர்கள் மீண்டும் தக்க வைத்துக் கொள்ளலாம். ஆர் சி பி அணி யாரும் எதிர்பாராத வகையில் சிராஜ், மேக்ஸ்வெல், டுபிளசிஸ், கேமரான் கிரீன் ஆகியோரை நீக்கி இருக்கிறது.

இன்னும் ஆர்சிபி அணியிடம் மூன்று ஆர் டி எம் கார்டு இருக்கின்றது. சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார் ஆகியோர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். சன்ரைசர்ஸ் இடம் ஒரு ஆர்டிஎம் கார்டு மட்டும்தான் கையில் இருக்கிறது. இதனால் நடராஜன் வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் வேறு அணிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Thursday, October 31, 2024, 20:00 [IST]
Other articles published on Oct 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+