For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL Retention - பெரிய வாய்ப்பை வீணடித்த சிஎஸ்கே.. முக்கிய ஆல்ரவுண்டர் கேகேஆர்க்கு சென்றார்

மும்பை : டி20 உலககோப்பை முடிந்த மறுநாளே ஐபிஎல் 2023ஆம் ஆண்டுக்கான சீசன் இப்போதே களைகட்ட தொடங்கிவிட்டது.

ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த நிலையில், எந்த அணி வீரர்கள் யாரை தக்க வைக்கின்றனர்.

யாரை விடுவிக்கின்றனர் என்பதை நாளை செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்குள் பிசிசிஐயிடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஷர்துல் தாக்கூர்

ஷர்துல் தாக்கூர்

மினி ஏலத்திற்கு முன்பே, ஐபிஎல் அணிகள் தங்களுக்குள் வீரர்களை மாற்றி கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதன் படி டெல்லி அணி மெகா ஏலத்தில் 10.75 கோடி ரூபாய் கொடுத்து எடுத்த ஷர்துல் தாக்கூரை விடுவிக்க முடிவு எடுத்தது. இதற்கு காரணம் கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளையும், 120 ரன்களையும் ஷர்துல் அடித்திருந்தார். இதனால் அவரை கூடுதல் விலை கொடுத்து வாங்கிவிட்டதாக டெல்லி நினைத்தது.

கேகேஆர் அணி வாங்கியது

கேகேஆர் அணி வாங்கியது

இதனால் ஷர்துல் தாக்கூர் ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர். தற்போது சிஎஸ்கேவின் பந்துவீச்சும் மொக்கையாக இருப்பதால், அவரை ஏலத்திற்கு முன்பே சிஎஸ்கே தேர்வு செய்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொல்கத்தா அணி, ஷர்துல் தாக்கூரை ஏலத்திற்கு முன்பே டெல்லி அணியிடமிருந்து வாங்கியது. அதுமட்டுமல்லாமல் கொல்கத்தா அணி ஏலத்திற்கு முன்பே குஜராத் அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் லோக்கி பெகுர்சன் மற்றும் ஆப்கான் வீரர் குர்பாசை வாங்கிவிட்டது.

கேகேஆர் விடுவித்த வீரர்கள்

கேகேஆர் விடுவித்த வீரர்கள்

இதே போன்று கொல்கத்தா அணி வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயரை தங்களது அணியிலிருந்து விடுவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஏதேனும் ஒரு வீரரை சென்னை அணி குறிவைத்து தூக்கினால் ஷர்துலை இழந்ததை சரிக்கட்டி கொள்ளலாம். கொல்கத்தா அணியின் வெளிநாட்டு வீரரான சாம் பில்லிங்க்ஸ், டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக, அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சிஎஸ்கே முடிவு

சிஎஸ்கே முடிவு

இந்த நிலையில், கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளரான பாட் கம்மின்சும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக முடிவு எடுத்துள்ளார். பெங்களூரு அணியை பொறுத்தவரை ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் பெகரன்டராப்பை மும்பை அணி ஏலத்திற்கு முன்பே வாங்கியுள்ளது. சிஎஸ்கே அணி ஜடேஜாவை விட்டு கொடுக்காத நிலையில், ஆடம் மிலின் மற்றும் இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜார்டனை விடுவிக்க சிஎஸ்கே முடிவு எடுத்துள்ளது.

Story first published: Monday, November 14, 2022, 20:10 [IST]
Other articles published on Nov 14, 2022
English summary
IPL Retention – KKR Drafted 3 Big Players ahead of mini auction IPL Retention - பெரிய வாய்ப்பை வீணடித்த சிஎஸ்கே.. முக்கிய ஆல்ரவுண்டர் கேகேஆர்க்கு சென்றார்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+