ஐபிஎல் அரை இறுதிப் போட்டிகள் – பெங்களூரிலிருந்து மும்பைக்கு திடீர் மாற்றம்

நேற்று முன்தினம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஸ்டேடிய வளாகத்தில் இரண்டு சிறிய சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி போட்டி நடைபெற்றது.
இந்த நிலையில் பெங்களூரில் நடைபெறவிருந்த அரை இறுதிப் போட்டிகளை ஐபிஎல் நிர்வாகம் மும்பைக்கு மாற்றி விட்டது.
இதுகுறித்து ஐபிஎல் ஆணையர் லலித் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் குறைந்த சக்த வாய்ந்த குண்டுவெடிப்புதான் என்றாலும் கூட போட்டிகளை தொடர்ந்து நடத்துவது பாதுகாப்புக்கு உரியதாக இருக்காது என்று கருதுகிறோம். இதனால்தான் இரு அரை இறுதிப் போட்டிகளையும் நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்திற்கு மாற்றியுள்ளோம்.
உள்ளூர் காவல்துறை, ஐபிஎல் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தைகள், ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே கிரிக்கெட் வாரியத்தின் ராஜீவ் சுக்லா கூறுகையில், அரை இறுதிப் போட்டிகளுக்கான பாதுகாப்பை வழங்க பெங்களூர் காவல்துறை தயக்கம் காட்டியது. இதனால்தான் நாங்கள் போட்டியை மாற்ற வேண்டியதாயிற்று என்று கூறியுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications