Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL தொடரிலேயே சிறந்த இன்னிங்ஸ்.. பஞ்சாப் 88/9 எடுத்து தடுமாற்றம்.. இறுதியில் ஷிகர் தவான் 99 ரன்கள்

ஐதராபாத் : ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்துள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள், ஐதராபாத் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினார். பிராப்சிம்ரன் சிங் டக் அவுட்டாக, மேத்தீவ் ஷார்ட் 1 ரன்னிலும், ஜித்தேஷ் சர்மா 4 ரன்களிலும் வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும், மறுமுனையில் ஷிகர் தவான் அதிரடியை காட்டினார்.

IPL - Shikhar dhawan lonely brilliant 99 runs made punjab as respectable score

சாம் கரன் ஒரு அளவு நின்று ரன் சேர்க்க, அவரும் 22 ரன்களில் வெளியேறினார். சிக்கந்தர்ராசா 5 ரன்களிலும், ஷாரூக்கான் 4 ரன்களிலும் , ஹர்பிராத் பிரார் 1 ரன்னிலும் சீரான இவெளியில் தங்களது விக்கெட்டை பறிக் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் 88 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்து பஞ்சாப் தடுமாறியது.

ஆனால் ஷிகர் தவான் மட்டும் தனி ஆளாக நின்று, பவுண்டரிகளையும், சிக்சர்களையும் அடித்து அணியின் ஸ்கோரை கௌரவமான இலக்கிற்கு கொண்ட சென்றார். 5 சிக்சர், 12 பவுண்டரிகளை அடித்த ணிகர் தவான் கடைசி ஓவரில் சதம் அடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர் முனையில் பவுலர் இருந்ததால் தவான் சிங்கிள் எடுக்க முடியவில்லை. எனினும் கடைசி பந்தில் ஒரு சிக்சர் அடிக்க, ஷிகர் தவான் 99 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். இதனால் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் மாயங் மார்க்கண்டே 4 விக்கெட்டுகளும், உம்ரான் அக்மல், மார்கோ யான்சன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Story first published: Sunday, April 9, 2023, 21:50 [IST]
Other articles published on Apr 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+