Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இக்கட்டான சூழ்நிலை.. ஷ்ரேயாஸ் ஐயர் எடுத்த தில்லான முடிவு.. கோலி கேப்டன்சிக்கு இப்போதே வந்த பிரச்சனை!

டெல்லி: நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் எடுத்த சில தில்லான முடிவுகள் காரணமாக அவரை இந்திய அணியின் கேப்டனாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழ தொடங்கி உள்ளது.

டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக உருவெடுத்து வருகிறார். எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இவரும் கேப்டன்சி ரேஸில் இருக்கிறார்.

கடந்த முறை வீழ்ச்சியில் இருந்து டெல்லியை இவர் மீட்டு கொண்டு வந்தார். தன்னை நல்ல கேப்டன் என்று கடந்த தொடரிலேயே இவர் நிரூபித்து விட்டார். இதனால் இந்த முறை ஷ்ரேயாஸ் மீது பலரும் நம்பிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.

டெல்லி அணி

டெல்லி அணி

இந்த தொடரில் இவர் டெல்லி அணியை பைனலுக்கு கொண்டு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏன் டெல்லி கோப்பையை வென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. நேற்று நடந்த போட்டியிலேயே தனது கேப்டன்சி எவ்வளவு வலிமை வாய்ந்தது என்று ஷ்ரேயாஸ் நிரூபித்தார். முதலில் பெங்களூர் அணியில் இருந்து டெல்லி வந்த ஸ்டோன்ஸை மிக சிறப்பாக ஷ்ரேயாஸ் பயன்படுத்தினார்.

கோலி கோலி எப்படி

கோலி கோலி எப்படி

கோலி இவரை முறையாக பயன்படுத்தாத நிலையில் ஷ்ரேயாஸ் சிறப்பாக பயன்படுத்தினார். அதேபோல் நேற்று ஷ்ரேயாஸ் ஸ்பின் பவுலர்களை கையாண்ட விதம் சிறப்பாக இருந்தது. தனது அணியின் பவுலர்களுக்கு முறையான ரொட்டேஷனில் ஓவர் கொடுத்தார். பேட்டிங் செய்யும் வீரரை பொறுத்து, தனது அணியின் பவுலிங்கை ரொட்டேட் செய்து கொண்டே இருந்தார்.

செம பாண்டிங்

செம பாண்டிங்

அதேபோல் டைம் அவுட் நேரங்களில் பாண்டிங் கொடுத்த டிப்ஸ்களை அப்படியே களத்தில் செயலுக்கு கொண்டு வந்தார். இதனால்தான் நேற்று வலிமையான பஞ்சாப் பேட்டிங் ஆர்டர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆட்டம் கண்டது.மயங்க் அகர்வாலை தவிர மற்ற அனைத்து வீரர்களையும் மிக எளிதாக வியூகம் அமைத்து ஷ்ரேயாஸ் வீழ்த்தினார்.

இரண்டு இரண்டு முடிவு

இரண்டு இரண்டு முடிவு

நேற்று இவர் எடுத்த இரண்டு முடிவுகள், பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. முதல் முடிவு அஸ்வின் சென்ற பின் டென்சன் ஆகாமல் இருந்தது. நேற்று போட்டியில் டெல்லி அஸ்வின் ஸ்பின் பவுலிங்கை அதிகம் நம்பி இருந்தது. அதேபோல் அஸ்வினும் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் எடுத்தார். ஆனால் அஸ்வின் அதன்பின் காயம் காரணமாக வெளியேறினார். ஆனால் ஷ்ரேயாஸ் இதனால் கலங்கவில்லை

மாற்று மாற்று வீரர்கள்

மாற்று மாற்று வீரர்கள்

உடனே மாற்று வீரர்களை கொண்டு வந்து, இருக்கிற பவுலர்களை வைத்தே சமாளித்தார். பெரிய ஸ்பின் பவுலர் சென்றுவிட்டார் என்று ஷ்ரேயாஸ் பதற்றம் அடையவில்லை. அஸ்வின் சென்ற பின்பும் தொடர்ந்து டெல்லி அணி விக்கெட்டுகளை வீழ்த்தியது. அதேபோல் டெத் ஓவர்களில் நேற்று ரபாடா அதிக ரன்களை கொடுத்தார். இதனால் பஞ்சாப் அணி வெற்றியை நோக்கி சென்றது.

பதற்றம் பதற்றம் இல்லை

பதற்றம் பதற்றம் இல்லை

ஆனால் இதை எல்லாம் பார்த்து ஷ்ரேயாஸ் பதற்றம் அடையவில்லை. மிகவும் கூலாகவே இருந்தார். அதோடு போட்டி டை ஆனதும், கண்டிப்பாக டெல்லிதான் வெற்றிபெற போகிறது என்ற முடிவிற்கு அவர் வந்துவிட்டார். அப்போதே அவர் வெற்றியை கொண்டாடிவிட்டார். எல்லோரும் ஸ்டோனிஸ்தான் பவுலிங் போட வருவார் என்று நினைத்த போது, தைரியமாக ரபாடாவை ஷ்ரேயாஸ் களத்திற்கு அனுப்பினார்.

முடிவு செம முடிவு

முடிவு செம முடிவு

தோனி 2007ல் ஜோகிந்தர் சர்மார்விற்கு ஓவர் கொடுத்தது போல ஷ்ரேயாஸ் எந்த தயங்கும் இன்றி ரபாடாவிற்கு ஓவர் கொடுத்தார். ரபாடா நேற்றைய போட்டியில் பவுலிங்கில் கடைசி கட்டத்தில் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனாலும் அவருக்கு ஓவர் கொடுத்தார். கை மேல் பலன். அந்த ஒவரில் 3 ரன்களை மட்டும் கொடுத்து ரபாடா இரண்டு விக்கெட் எடுத்தார். ஷ்ரேயாஸ் எடுத்த இந்த முடிவு போட்டியின் முடிவையே மாற்றியது.

கோலி கோலி சர்ச்சை

கோலி கோலி சர்ச்சை

இதனால்தான் தற்போது ஷ்ரேயாஸ் இந்திய அணியின் கேப்டனாக வர வேண்டும். இவர் தனது வீரர்களை நன்றாக பயன்படுத்துகிறார். கோலியிடம் அந்த பலம் இல்லை. கோலி சிறந்த வீரர். ஆனால் சிறந்த கேப்டன் இல்லை என்று இப்போதே நெட்டிசன்கள் சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள். இன்று நடக்கும் ஆர்சிபி போட்டியில் கோலி இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் அளிப்பார் என்கிறார்கள்.

Story first published: Monday, September 21, 2020, 15:15 [IST]
Other articles published on Sep 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+