IPL - அந்த சிரிப்ப பாருங்க சார்..காவ்யா மாறனுக்கு முதல் வெற்றியை கொடுத்த ஐதராபாத்..ஷிகர் ஆட்டம் வீண்
ஐதராபாத் : ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள், ஐதராபாத் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினார். பிராப்சிம்ரன் சிங் டக் அவுட்டாக, மேத்தீவ் ஷார்ட் 1 ரன்னிலும், ஜித்தேஷ் சர்மா 4 ரன்களிலும் வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும், மறுமுனையில் ஷிகர் தவான் அதிரடியை காட்டினார்.

சாம் கரன் 22 ரன்களில் வெளியேற, சிக்கந்தர்ராசா 5 ரன்களிலும், ஷாரூக்கான் 4 ரன்களிலும் , ஹர்பிராத் பிரார் 1 ரன்னிலும் சீரான இவெளியில் தங்களது விக்கெட்டை பறிக் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் 88 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்து பஞ்சாப் தடுமாறியது. மறுமுனையில் தனி ஆளாக போராடிய ஷிகர் தவான் 66 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக விளையாடிய ஹாரி புருக் 13 ரன்களில் வெளியேற, மாயங் அகர்வால் 21 ரன்கள் சேர்த்தார்.இதனையடுத்து களத்திற்கு வந்த ராகுல் திரிபாதி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தார்.
அதன் பிறகு அதிரடியை ராகுல் திரிபாதி காட்ட தொடங்கினார். மறுனையில் கேப்டன் மார்க்கரம் பவுண்டரிகளை விளாச தொடங்கினார். சிறப்பாக விளையாடிய ராகுல் திரிபாதி 48 பந்துகளில் 74 ரன்கள் சேர்க்க, மார்க்கரம் 21 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். இதனால் ஐதராபாத் அணி 145 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து முதல் வெற்றியை பெற்றது. இதனால் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மகிழ்ச்சியில் ஜொலித்தார்.


Click it and Unblock the Notifications