Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் அணிகளின் ஒரிஜினல் பஞ்ச் டயலாக் என்ன? நெட்டிசன் கொடுக்கும் ரீல் வசனம் என்ன.. சிரிப்பு நிச்சயம்

மும்பை : ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் பல ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள். அவர்களை கவரும் வகையில் ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களுக்கு என ஒரு பஞ்ச் வசனத்தை வைத்திருக்கிறது. இதில் ஐபிஎல் தொடங்கிய ஆதி காலத்திலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விசில் போடு என்ற ஒரே வசனத்தை தான் வைத்து இருக்கிறது.

இந்த நிலையில் 10 அணிகளுக்கும் அணி நிர்வாகம் பஞ்ச் என்ன? சினிமா பஞ்ச் டயலாக் எது பொருத்தமாக இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தற்போது திருமணம் ஆன பல 90கிட்ஸ் பள்ளிக்கூடத்திற்கு சென்ற காலத்திலிருந்து விசில் போடு என்ற வசனத்தை மாற்றாமல் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9வது இடத்தை பிடித்தது. இதனால் இம்முறை சாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் கொடுக்கும் பஞ்ச் டயலாக் நான் வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன் என்று சொல் என்ற வசனம் தான்.

மும்பை அணி

மும்பை அணி

5 முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துனியா ஹிலி தேங்கே என்ற பன்ச் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது உலகத்தை நாம் வெல்வோம் என்பதுதான் அதன் பொருள். ஆனால் மும்பை அணியின் கதையோ மிகவும் பரிதாபமாக உள்ளது. கடந்த இரண்டு முறையாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லாத மும்பை அணி தற்போது தொடரில் பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியதால் "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்ற வசனம் தான் பொருந்தும் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

பெங்களூரு அணி

பெங்களூரு அணி

ஐபிஎல் தொடரிலே மிகவும் பரிதாபமான அணி என்றால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தான். எப்போதும் ஈஸாலா கப் நமதே என்று கோஷத்தை அவர்களது ரசிகர்கள் எழுப்புவார்கள். ஆனால் ஒரு முறை கூட அவர்கள் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இதனால் ரசிகர்கள் "எங்கே செல்லும் பாதை என்ற பாடலை தான் ஆசிபிக்கு டெடிகேட் செய்திருக்கிறார்கள்". கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது பஞ்சாக கோர்போ லோர்போ ஜித்போ ரே என்று போட்டு இருக்கிறார்கள். அதற்கு அர்த்தம் சண்டை செய்வோம் வெற்றி பெறுவோம் என்பது பொருள்.

ஆனால் நமது நெட்டிஷன்கள் "சண்டையில் கிழியாத சட்டை எங்க இருக்கு "அப்படி என்று கிண்டல் செய்து இருக்கிறார்கள்.

சன்ரைசர்ஸ் அணி

சன்ரைசர்ஸ் அணி

சன்ரைசர்ஸ் அணி நமக்கு எதுக்கு வம்பு என்று ஆரஞ்சு ஆர்மி என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டார்கள். அதற்கு நமது நெட்டிசன்கள் சாமி படத்தில் ஒன்னு சாமி 2 சாமி ஆறு சாமி என்ற பாக்யானை கொடுத்திருக்கிறார்கள். ராஜஸ்தான் ராயல் அணி ஹல்லா போல் என தங்களது டேக் லைனை வைத்திருக்கிறார்கள். அதற்கு தாக்குதல் என அர்த்தம். இதற்கு நெட்டிசன்கள் பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் என கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி சடா பஞ்சாப் என தங்களது அணியை அழைக்கிறார்கள். அதற்கு விவேக் காமெடியான உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா? என காமெடியை பதிவிட்டு இருக்கிறார்கள். அதாவது வியாபாரமே இல்லை என்றாலும் தொடர்ந்து காபி போடும் காட்சி போல் இவர்கள் வெற்றியை பெறவில்லை என்றாலும் தொடர்ந்து விளையாடுகிறார்கள் என்ற காட்சி சரியாக இருக்கும்.

 குஜராத்

குஜராத்

குஜராத் அணிக்கு ஆவா டே என டாக் லைன் இருக்கிறது. இதற்கு அர்த்தம் வரலாம் வரலாம் வா என்று பொருளாம். இதை பைரவா படத்தில் தளபதி விஜய் பாடிவிட்டார். லக்னோ அணிக்கு கசாப் அண்டாஸ் என அழைக்கிறார்கள். அதற்கு அற்புதமாய் நடை போடு என அர்த்தமாம். இதற்கு ராகுலை கிண்டல் செய்யும் விதமாக மெல்ல மெல்ல பில்டிங்க்கு வலிக்க போகுது என வடிவேலுவின் காமெடியை நெடிசன்கள் போட்டிருக்கிறார்கள்.ஏனென்றால் ராகுல் அவ்வளவு மெதுவாக ரன் சேர்ப்பாராம்.டெல்லி அணி யே ஹை நாயா டெல்லி என டாக் லைன் வைத்திருக்கிறார்கள். அதாவது இது புது டெல்லி என பொருளாம். தோற்றம் புதியதாக இருந்தாலும் முடிவு அப்படியே தான் இருக்கிறது.

Story first published: Wednesday, March 29, 2023, 20:55 [IST]
Other articles published on Mar 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+