ஆளுக்கு "அவ்வஞ்சு" வீரர்களை தக்க வச்சுக்கலாம்.. ஐபிஎல் அணிகளுக்கு ஒரே குஷிதான்!
மும்பை: ஐபிஎல் அணிகளில் தங்களது வீரர்களில் 5 பேர் வரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று ஐபிஎல் நிர்வாகக் குழு அனுமதி அளித்துள்ளது.
ராஜீவ் சுக்லா தலைமையில் நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஐந்து பேரில் 3 பேர் இந்திய வீரர்களாகவும், 2 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும் இருக்கலாம்.
அதேசமயம், இந்த ஐந்து பேரில் அதிகம் பிரபலம் இல்லாத வீரர்கள் அதிகபட்சம் 2 பேர் வரை இடம் பெற முடியும். அதேபோல ஒரு அணி அதிகபட்சம் 25 வீரர்களை வைத்துக்கொள்ள முடியும். முன்பு இது 27 வீரர்களாக இருந்தது. அதில் 2 பேரை தற்போது குறைத்து விட்டனர்.

25 பேர் வரைதான்
இந்த 25 பேரில் வெளிநாட்டு வீரர்கள் அதிகபட்சம் 8 பேர் வரை இடம் பெற முடியும். முன்பு இது 9 ஆக இருந்தது. அதேசமயம், ஒவ்வொரு அணியின் ரோஸ்டரிலும் குறைந்தது 18 வீரர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்பி வருவதால் அந்த அணியின் டோணி, ரெய்னா போன்றோர் மீண்டும் தக்க வைக்கப்படலாம். அல்லது ஏலத்தில் எடுக்கப்படலாம்.

ஏலம் விடப்படும் பென்
முக்கிய வீரரான இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளார். அவரை பொது ஏலத்தில் விட்டு விற்பனை செய்யவுள்ளனர். அதேபோல சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் தக்க வைக்க முடியாத நிலை உள்ளது.

சென்னைக்கு இவர்கள் கிடைப்பார்கள்
சென்னையைப் பொறுத்தவரை டோணி, அஸ்வின், பாப் டு பிளசிஸ், பாபா அபராஜித், அங்குஷ் பெய்ன்ஸ், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, டிவேயன் பிராவோ, பிரன்டம் மெக்கல்லம், டிவேயன் ஸ்மித், ஆன்ட்ரூ டை, இர்பான் பதான், ஈஸ்வர் பாண்டே ஆகியோரை தக்க வைக்க முடியும்.

ராஜஸ்தான் அணி வீரர்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை ரஹானே, ஸ்டீவன் ஸ்மித், அங்கித் சர்மா, ரஜத் பாட்டியா, ஜேம்ஸ் பால்க்னர், தவல் குல்கர்னி ஆகியோரை தக்க வைக்க முடியும்.


Click it and Unblock the Notifications