Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உன் ஆளுக்கும் என் ஆளுக்கும் ஜோடி போட்டு பாப்போமா? ட்விட்டரில் “தர லோக்கலாக” மோதிய ஐபிஎல் அணிகள்

Recommended Video

ட்விட்டரில் தர லோக்கலாக மோதிய ஐபிஎல் அணிகள்- வீடியோ

சென்னை : ட்விட்டர் சமூக வலை தளத்தில் மூன்று ஐபிஎல் அணிகளின் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் மூலம் போட்டி போட்டுக் கொண்டு ட்வீட் போட்ட சம்பவம் நடந்துள்ளது.

ஒரு அணி பதிவிட்ட ட்வீட்டுக்கு மற்றொரு அணி போட்டியாக பதிவிட்டதால் ரசிகர்கள் குஷியாக இந்த போட்டியை ரசித்தனர்.

ஹர்திக் பண்டியா போட்ட ட்வீட்டுக்கு அவரது அணியான மும்பை இந்தியன்ஸ் பதில் போட்டது. அங்கே இருந்து தான் இந்த போட்டி துவங்கியது.

ஹர்திக் போட்ட படம்

ஹர்திக் பண்டியா தன் சகோதரர் க்ருனால் பண்டியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீரன் பொல்லார்ட் உடன் இணைந்து புகைப்படம் எடுத்து பதிவிட்டார். இவர்கள் மூவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடி வருகிறார்கள். இந்த புகைப்படத்திற்கு பதில் அளித்த மும்பை இந்தியன்ஸ் அணி "இதை விட சிறப்பான ஆல்-ரவுண்டர்கள் வேண்டும்.. நாங்கள் காத்திருக்கிறோம்" என அவர்களை கேலி செய்தது.

சன்ரைசர்ஸ் போட்ட பதிவு

சன்ரைசர்ஸ் போட்ட பதிவு

மும்பை இந்தியன்ஸ் பதிவுக்கு பதில் அளித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, "காத்திருக்கவே வேண்டாம்" எனக் கூறி தங்கள் அணியின் மூன்று சிறந்த ஆல்-ரவுண்டர்களின் (முகமது நபி, ரஷித் கான், மற்றும் ஷகிப் அல் ஹசன்) புகைப்படத்தை பகிர்ந்தது. இவர்கள் மூவரும் ஒருநாள் மற்றும் டி20 ஆல்-ரவுண்டர்கள் தர வரிசையிலும் முன்னணியில் இருப்பவர்கள்.

கோப்பை தான் முக்கியம்

கோப்பை தான் முக்கியம்

இதைக் கண்ட மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் அணி ஒருமுறை மட்டுமே ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் மூன்று முறை வென்றுள்ளது என குறிப்பிடும் வகையில் தாங்கள் வென்ற மூன்று கோப்பைகளின் புகைப்படங்களை பதிவிட்டு, "நீங்கள் இன்னும் காத்திருங்கள்" என கூறியது.

லந்து பண்ணிய சிஎஸ்கே

லந்து பண்ணிய சிஎஸ்கே

இந்த சண்டை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மற்றொருபுறம் சிஎஸ்கே அணி ஹர்திக் பண்டியா போட்ட மூன்று மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் புகைப்படத்திற்கு போட்டியாக, தோனியை மூன்று முகம் ரஜினி போல கிராபிக்ஸ் செய்து மூன்று தோனி நடந்து வருவது போல ஒரு படத்தை பதிவிட்டு அல்லு கிளப்பியது.

Story first published: Wednesday, November 14, 2018, 18:49 [IST]
Other articles published on Nov 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+