Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரிய சத்தம்.. ராகுல் சந்தேகம்.. ஒரே ஒரு தங்க சங்கிலியால் மைதானத்தில் ஏற்பட்ட குழப்பம்..என்ன நடந்தது

துபாய்: பஞ்சாப்பிற்கு எதிராக டெல்லி ஆடி வரும் ஐபிஎல் போட்டியில், இன்று சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பு பெற்று வருகிறது. நேற்று சென்னை vs மும்பை போட்டி விறுவிறுப்பாக முடிந்தது. இந்த நிலையில் இன்று டெல்லி மற்றும் பஞ்சாப் இடையில் போட்டி நடந்தது.

பஞ்சாப் அணியின் கேப்டனாக கே. எல் ராகுலும், பயிற்சியாளராக கும்ப்ளேவும் பதவி ஏற்றபின் நடக்கும் முதல் போட்டியாகும் இது. இதனால் இந்த போட்டி அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

பஞ்சாப் எப்படி

பஞ்சாப் எப்படி

பஞ்சாப்பிற்கு எதிராக டெல்லி தொடக்கத்தில் இருந்தே திணறி வந்தது. டெல்லி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. முக்கியமாக பஞ்சாப் அணியின் ஷமி பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது. இதனால் தொடக்கத்திலேயே டெல்லி அணி திணறியது. இதில் இரண்டாவது ஓவரில் சுவாரசிய சம்பவம் ஒன்று நடந்தது.

ஷமி பவுலிங்

ஷமி பவுலிங்

ஷமி போட்ட அந்த ஓவரில் அப்போதுதான் தவான் ரன் அவுட் ஆகி இருந்தார். அதன்பின் தாவன் இடத்தில ஹெட்மெயர் களமிறங்கி ஆடினார். 2வது ஓவரின் 5வது பந்தில், ஷமி போட்ட பவுன்சர், ஹெட்மெயர் பேட்டில் உரசுவது போல சத்தம் கேட்டது. மிகவும் சத்தமாக பேட்டில் பந்து பட்டது போல சத்தம் கேட்டது.

கேட்ச் பிடித்தார்

கேட்ச் பிடித்தார்

அந்த பந்தை கேட்ச் பிடித்த கே எல் ராகுல் விக்கெட் கேட்டார். ஷமியும் விக்கெட் என்று கத்தினார். சில நொடி யோசித்த நடுவர் விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார். அதன்பின் கே எல் ராகுல் ரிவ்யூ கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கே எல் ராகுல் ரிவ்யூ கேட்கவில்லை. ஆனால் அந்த சத்தத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

என்ன சத்தம்

என்ன சத்தம்

அதன்பின் மீண்டும் ரீ கேப் செய்யப்பட்டது. அப்போதுதான் பந்து பேட்டில் படவே இல்லை என்று தெரிந்தது. அந்த சத்தம் ஹெட்மெயர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியில் இருந்து வந்துள்ளது. ஹெட்மெயர் பேட்டை சுற்றிய போது, அவரின் கழுத்து சங்கிலி, கழுத்தில் வேகமாக அடித்து, அந்த சத்தம் மைக் மூலம் கேட்டது. இதுதான் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட காரணமாக இருந்தது.

Story first published: Sunday, September 20, 2020, 20:55 [IST]
Other articles published on Sep 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+