Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திறக்கப்பட்டது விண்டோ.. அணி மாற போகும் வீரர்கள்.. இன்னும் சில நாட்களில் ஐபிஎல் 2021 ஏலம்.. பின்னணி

சென்னை: 2021 ஐபிஎல் ஏலம் தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. வீரர்களை வெளியிடுவதற்கான விண்டோவும் திறக்கப்பட்டுள்ளது .

2021 ஐபிஎல் தொடர் வரும் மே மாதம் நடக்க உள்ளது. 2020 ஐபிஎல் துபாயில் நடந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் நடத்துவது குறித்து பிப்ரவரி முதல் வாரம் நடக்க உள்ள ஏலத்தில் முடிவுகள் எடுக்கப்படும் என்கிறார்கள். இதே மீட்டிங்கில் ஏலத்திற்கான தேதி குறித்தும் முடிவு எடுக்கப்படும்.

எப்போது

எப்போது

2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் விரைவில் நடக்க உள்ளது. இந்த ஏலத்திற்காக ஐபிஎல் அணிகள் இப்போதே தயார் ஆக தொடங்கிவிட்டது. பெரிய அளவில் இந்த தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 11ம் தேதி ஏலத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மோசம்

மோசம்

இதற்கான டிரான்ஸ்பர் டிரேடிங் விண்டோ திறக்கப்பட்டுள்ளது. இந்த விண்டோவின் மூலம் ஒரு அணி தங்கள் அணியில் இருக்கும் வீரர்களை வெளியேற்ற முடியும். தங்கள் அணியில் இருக்கும் வீரர்களை பிற அணிக்கு இதன் மூலம் மாற்ற முடியும். இதற்கான விண்டோ நேற்று இரவு திறக்கப்பட்டது.

எப்படி

எப்படி

ஜனவரி 21ம் தேதி வரை இந்த விண்டோ திறக்கப்பட்டு இருக்கும். இன்னும் 15 நாட்களில் பல வீரர்கள் பல்வேறு அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இந்த 15 நாட்களில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியில் இருக்கும் வீரர்களை தங்கள் அணிக்குள் இழுக்க முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்பாடு

ஏற்பாடு

இந்த ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்தால் சென்னை, மும்பை, பெங்களூர், கொல்கத்தாவில் நடக்கும். இல்லையென்றால் மும்பையில் மட்டுமே நடக்கும். அதற்கும் வாய்ப்பு இல்லை என்றால் இந்த தொடர் மீண்டும் துபாயில் நடக்கலாம் என்கிறார்கள்.

Story first published: Wednesday, January 6, 2021, 9:38 [IST]
Other articles published on Jan 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+