
பஞ்சாப் பஞ்சாப் திணறல்
ஆனால் ஸ்டோனிஸ் மட்டுமே கடைசி வரை அதிரடியாக ஆடினார். டெல்லி வீரர் ஸ்டோனிஸ் 21 பந்தில் 53 ரன்களை எடுத்தார். இதில் 7 பவுண்டரி 3 சிக்ஸ் அடக்கம். இதனால் டெல்லி 157 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய பஞ்சாப் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் மயங்க் அகர்வால் அதிரடியாக ஆடி 89 ரன்களை எடுத்து அணியை மீட்டார்.

பஞ்சாப் பஞ்சாப் அணி எப்படி
அதன்பின் பஞ்சாப் அணி திணறி திணறி ஆடியது. கே எல் ராகுல் உட்பட வரிசையாக எல்லா வீரர்களும் அவுட்டானார்கள். அதன்பின் ஆடிய பஞ்சாப் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் மயங்க் அகர்வால் மட்டுமே அதிரடியாக ஆடினார். டெஸ்ட் அணி வீரர் என்றாலும், எல்லோருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் 89 ரன்களை எடுத்து அணியை மீட்டார்.

என்ன என்ன நடந்தது
இந்த போட்டியில் கடைசி ஒரு பாலில் ஒரு ரன் அடிக்க வேண்டும் என்ற நிலையில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 157 ரன்கள் எடுத்து போட்டி டை ஆனது. அதன்பின் சூப்பர் ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே பஞ்சாப் எடுத்து டெல்லியிடம் தோல்வியை தழுவியது.நேற்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் நடுவர்கள் எடுத்த தவறான முடிவு, மொத்தமாக போட்டியின் முடிவையே மாற்றி உள்ளது.

டெல்லி டெல்லி வீரர்
இந்த போட்டியில் டெல்லி அணியின் வீரர் ரபாடா 19வது ஓவரை வீசி வந்தார். அவரின் 3வது பந்தில், மயங்க் அகர்வால் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். அதில் ஒரு புல்டாஸ் போட்டார். இந்த பந்தை அகர்வால் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அப்படியே திருப்பினார். அவர் மொத்தம் இரண்டு ரன்கள் ஓடினார். ஆனால் அதில் ஒரு ரன் ஷார்ட் ரன் என்று நடுவர் தீர்ப்பு அளித்தார். அதாவது விக்கெட் கோட்டை தொடாமல் ஓடியதாக கூறி, ஒரு ரன் கொடுக்க நடுவர் மறுத்து வித்திட்டார் .

மைதானம் போட்டி மைதானம்
மைதானத்தில் இருந்த நடுவரின் நிதின் மேனன்தான் இந்த முடிவை எடுத்தது. இதனால் போட்டி கடைசி ஒரு ரன் வித்தியாசத்தில் டை ஆகி சூப்பர் இவருக்கு சென்று, அது டெல்லி வெற்றிக்கு காரணமாக மாறியது. ஆனால் அதன்பின் செய்யப்பட்ட ரீ கேப் வீடியோக்களில்தான் நடுவர் தவறாக முடிவு எடுத்துவிட்டார். அகர்வால் இரண்டு ரன்கள் எடுத்தார். இதில் ஷார்ட் ரன் எதுவும் இல்லை.

தவறு தவறான முடிவு
அவர் எடுத்த தவறான முடிவு காரணமாக போட்டியின் முடிவே மாறிவிட்டது. அந்த ஒரு ரன் கொடுத்து இருந்தால் போட்டி சூப்பர் ஓவருக்கே சென்று இருக்காது . இதை தற்போது பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள் . நடுவர்கள் செய்த மோசமான அம்பயரிங் இந்த மோசமான முடிவிற்கும், பஞ்சாப் அணியின் தோல்விக்கும் காரணம் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications