ஐயோ.. இவருக்கும் இது தான் கடைசி ஐபிஎல்-லா? - சோகத்துடன் 'பைபை' சொல்லும் வீரர்கள் யார்?
மும்பை: ஐபிஎல் 2021 தொடரோடு கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட வாய்ப்பிருக்கும் வீரர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
போன வருடம் கொரோனா கோலத்திலும் ஐக்கிய அரேபிய அமீரகத்தில் போட்டியை நடத்தி முடிந்துவிட்டது ஐபிஎல் நிர்வாகம். அதுவும் ரசிகர்கள் இன்றி. நிச்சயம் காய்ந்து கிடந்த ரசிகர்களுக்கு அதுவொரு ஆறுதலாக இருந்தது.
இந்நிலையில், இந்தாண்டுக்கான ஐபிஎல் ஏலம் வரும் பிப்.18ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்கள் பட்டியலில் மாற்றங்களை ஏற்படுத்த ஆயத்தமாகி வருகின்றன. ஆனால், 2022ல் மெகா ஏலம் நடைபெறுகிறது. இதில், பல வீரர்கள் ரிலீஸ் செய்யப்பட்டு, சூழலுக்கு ஏற்ப வெவ்வேறு அணிகளால் வாங்கப்படுவார்கள்

தோனியின் எண்டு கார்டு?
2020 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் வரலாற்றில் முதன்முதலாக பிளே ஆஃப்க்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதனால் ரசிகர்களின் அதிருப்தியை காண முடிந்தது. ஆனால், 2021 சீசனில் நிச்சயம் விளையாடுவேன் என தோனியே உறுதி செய்துவிட்டார்.
எனினும், அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெறுவதால், 39 வயதான தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவார் என்பது சந்தேகமே. ஏனெனில், புதிய கேப்டன், புதிய அணி என்று சிஎஸ்கே தன்னை புதிதாக தகவமைத்துக் கொள்ளும் நேரமிது.
ஒரு வீரராக அணியில் இருந்து விலகினாலும், சிஎஸ்கே அணிக்கு ஏதாவது ஒரு வகையில் தோனி நிச்சயம் பங்காற்றுவார் என நம்பலாம். ஸோ, இந்த சீசனுக்கு மேல் தோனி விளையாடுவது பிராக்டிகலாக கடினமே.

இனி தமிழில் பேசமாட்டாரா?
ஹர்பஜன் சிங்கை பொறுத்தவரை, அவர் இந்த சீசனில் விளையாடுவாரா என்பதே பெரும் சந்தேகம் தான். 2020 ஐபிஎல் தொடரிலேயே அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக அணியில் இருந்து விலகியிருந்தார். 40 வயதான ஹர்பஜன் ஏற்கனவே முழு நேர வர்ணனையாளர் ஆகிவிட்டார். ஸோ, இதுவே அவருடைய கடைசி சீசனாக இருக்கலாம்.

எனக்கு எண்டே கிடையாதுடா
வயதுக்கும் திறமைக்கும் சம்பந்தமே இல்லை என்பதை சமீபத்தில் கூட 22 பந்துகளில் 84 ரன்கள் விளாசி நிரூபித்தவர் 41 வயதான க்றிஸ் கெயில். பஞ்சாப் அணிக்காகவும் கன்சிஸ்டண்ட் + அதிரடி என்று நன்றாகத் தான் ஆடி வருகிறார். ஆனால், அடுத்த வருடம் நடக்கும் மெகா ஏலத்தை முன்னிட்டு, இவரை பஞ்சாப் கழற்றிவிட வாய்ப்புள்ளது.

சோகத்துடன் ஓய்வா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் அம்பதி ராயுடு கூட இந்த ஐபிஎல் சீசனோடு ஓய்வு பெரும் எண்ணத்தில் இருப்பதாக தெரிகிறது. இவருக்கும் அதே பிரச்சனை தான். சர்வதேச அளவில் இவர் மீதான கவனம் குறைந்துவிட்ட நிலையில், மெகா ஏலத்துக்கு இவரை இதர அணிகள் கண்டுகொள்ளுமா என்பது சந்தேகமே. ஆகையால், இந்த சீசன் ராயுடுவின் கடைசி சீசனாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications