Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களைவிட நாங்க பெட்டர்.. பஞ்சாப் அணி வெற்றிக்காக மீடியாக்களை வம்பிழுத்த சேவாக்

டெல்லி: கிரிக்கெட் போட்டி குறித்த டிவிட் ஒன்றில், மீடியாவை வம்புக்கு இழுத்துள்ளார் வீரேந்திர சேவாக்.

ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக இருப்பவர் முன்னாள் கிரிக்கெட் வீரரான சேவாக். இவர் தனது டிவிட்டுகளால் சமீப காலமாக அதிக நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்து வருபவர்களில் ஒருவர்.

இந்த நிலையில் நேற்றும் ஒரு டிவிட் அதிகப்படியான நெட்டிசன்களை சென்று அடைந்தது. அதற்கு காரணம், அவர் மீடியாவை சீண்டியதுதான்.

பஞ்சாப் அபாரம்

பஞ்சாப் அபாரம்

நேற்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மொகாலியில் மோதின. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 167 ரன்களை எடுத்தது. இரண்டாவது பேட் செய்த கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. காரணம், பஞ்சாப் அணியின் தூள் பந்து வீச்சு.

ஸ்பின்னர்

ஸ்பின்னர்

குறிப்பாக இளம் ஸ்பின்னர் ராகுல் தெவாதியா 4 ஓவர்கள் வீசி 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரே ஓவரில் எதிரணி கேப்டனான கம்பீரையும், அதிரடி வீரர் ராபின் உத்தப்பாவையும் அவர் வீழ்த்தி ஆட்டத்தை தன் அணி பக்கம் திருப்பினார்.

சேவாக் குஷி

சேவாக் குஷி

வென்றேயாக வேண்டிய அப்போட்டியில் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா போலவே வீரேந்திரசேவாக்கும் குஷியடைந்தார். தனது டிவிட்டில் அதை வெளிப்படுத்தினார்.

மீடியாக்கள் மீது சீண்டல்

டிவிட்டரில் சேவாக் கூறுகையில், "அணி வீரர்களை நினைத்து நிஜமாக பெருமையடைகிறேன். சில மீடியாக்காரர்கள் வளைப்பதை (திரிப்பதை) விட எங்கள் சுழற்பந்து வீச்சாளர் பந்தை நன்கு வளைத்தனர் (சுழற்றினர்)" என கூறியுள்ளார்.

Story first published: Wednesday, May 10, 2017, 13:49 [IST]
Other articles published on May 10, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+