Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராகுல் எடுத்த தவறான முடிவு.. போட்டி மொத்தமாக மாறிய அந்த தருணம்.. சூப்பர் ஓவரில் என்ன நடந்தது?

துபாய்: டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி சூப்பர் ஓவர் சென்று மிகவும் திரில்லிங்காக முடிந்தது. இதில் சூப்பர் ஓவரில் பல அதிரடி திருப்பங்கள் நடந்தது.

Recommended Video

IPL 2020: Reasons for Delhi win against Punjab | OneIndia Tamil

ஐபிஎல் போட்டிகளை கடைசி வரை கணிக்க முடியாது என்று கூறுவார்கள். அதற்கு இன்று நடந்த போட்டி மிக சிறந்த உதாரணம். டெல்லி மற்றும் பஞ்சாப்பிற்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது.

இரண்டு அணிகளுக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் இல்லை. இதனால் இன்றைய போட்டி மீது பெரிய அளவில் பலரும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்றைய போட்டி பல திருப்பங்கள் , டிவிஸ்ட்களுடன் சூப்பர் ஓவர் வரை சென்றது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 157 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயேஸ் ஐயர் தலைமையிலான அணி கடைசி நேர அதிரடி மூலம் 157 ரன்களை எடுத்தது. அதிலும் டெல்லி வீரர் ஸ்டோனிஸ் 21 பந்தில் 53 ரன்களை எடுத்தார். இதில் 7 பவுண்டரி 3 சிக்ஸ் அடக்கம். அதன்பின் ஆடிய பஞ்சாப் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் மயங்க் அகர்வால் அதிரடியாக ஆடி 89 ரன்களை எடுத்து அணியை மீட்டார்.

கடைசி ஓவர் வரி

கடைசி ஓவர் வரி

கடைசி ஒரு பாலில் ஒரு ரன் அடிக்க வேண்டும் என்று அளவிற்கு இந்த போட்டி திரில்லாக சென்றது. கடைசியில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டை ஆகி, சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில் சூப்பர் ஓவரை டெல்லி அணிக்காக ரபாடா வீசினார். முதலில் பஞ்சாப் அணிக்காக கே எல் ராகுல் மற்றும் பூரான் இறங்கினார்கள். ஆனால் ராகுல் 2 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

மோசம்

மோசம்

அதன்பின் இறங்கிய மேக்ஸ்வெல்லும் டக் அவுட்டானார். இதனால் சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்தது. நன்றாக ஆடிய மயங்க அகர்வாலை ராகுல் இறக்காமல் தவறு செய்தார். அதன்பின் பஞ்சாப் அணி பவுலிங் செய்தது. பஞ்சாப் சார்பாக இதில் சமி பவுலிங் போட்டார்.டெல்லி அணிக்காக பண்ட் மற்றும் ஸ்டோனிஸ் இறங்கினார்கள். இதில் முதல் பால் டாட் பால் ஆனது. ஆனால் அடுத்த பந்தில் ஷமி வைட் பால் போட்டார்.

வெற்றி அடைந்தார்

வெற்றி அடைந்தார்

அதன்பின் அடுத்த பாலில் பண்ட் 2 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 3 ரன்களை எடுத்து எளிதாக டெல்லி அணி வென்றது. சூப்பர் ஓவர் வரைய போட்டி சென்ற நிலையில் கடைசியில் செம டிவிஸ்டுடன் சென்று போட்டி முடிந்தது. டெல்லி அணி வென்றது.

Story first published: Monday, September 21, 2020, 0:26 [IST]
Other articles published on Sep 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+