For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கெட்ட ஆட்டம் போட்ட தேவ்தத் படிக்கல்.. கோலியின் கண்டுபிடிப்பு..எந்த ஊர்ன்னு கேட்டா ஆடிப்போய்டுவீங்க!

துபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் வீரர் தேவ்தத் படிக்கல் மாஸ் பேட்டிங் செய்து ஐபிஎல் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து இருக்கிறார். பெங்களூர் அணிக்காக புதிதாக இறங்கி இருக்கும் தேவ்தத் படிக்கல் முதல் போட்டியிலேயே கெட்ட ஆட்டம் போட்டு இருக்கிறார்.

ஐபிஎல் போட்டியில் தற்போது பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிக்கு இடையிலான போட்டி துபாயில் நடந்து வருகிறது...இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் பவுலிங் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பெங்களூர் பேட்டிங் செய்தது. பெங்களூர் அணிக்காக ஆரோன் பின்ச் மற்றும் புதிய இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ஆகியோர் களமிறங்கினார்.

யார் இவர்

யார் இவர்

பெங்களூர் அணிக்காக களமிறங்கிய தேவ்தத் படிக்கல்லின் முதல் போட்டி இதுதான். ஆம் ஐபிஎல் போட்டியில் இதுதான் அவரின் முதல் போட்டி. இதுவரை பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டு இருந்த தேவ்துத் படிக்கல்லுக்கு இன்று கோலி வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து பயிற்சி ஆட்டங்களில் இவரின் ஸ்டைல் பிடித்து போய், இவருக்கு கோலி இன்று ஓப்பனிங் இறங்க வாய்ப்பு கொடுத்தார்.

செம ஆட்டம்

செம ஆட்டம்

இவரின் ரஞ்சி போட்டி மற்றும் அண்டர் 19 இந்திய அணி போட்டி இரண்டின் மூலம்தான் இவர் கோலியின் கவனத்தை ஈர்த்தார். அண்டர் 19 அணியில் இவர் நன்றாக விளையாடினார். ரஞ்சி கோப்பை போட்டியில் இவரின் ஆட்டம் சிறப்பாக இருந்த காரணத்தால் அண்டர் 19 அணிக்கு தேர்வானார். கர்நாடகா ரஞ்சி அணிக்காக இவர் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே 2018ல் 77 ரன்கள் எடுத்தார்.

இந்திய அண்டர் 19 அணி

இந்திய அண்டர் 19 அணி

இந்திய அண்டர் 19 அணியிலும் தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடினார். இதன் காரணமாகவும், கர்நாடக கிரிக்கெட் வாரியம் இவர் மீது வைத்த நம்பிக்கை காரணமாகவும் இவருக்கு பெங்களூர் அணியில் வாய்ப்பு கிடைத்தது. வெறும் 20 லட்சம் ரூபாய்க்குதான் 2019 ஐபிஎல் போட்டிக்கு முன்பாக கவர் பெங்களூர் அணியில் எடுக்கப்பட்டார்.

எப்படி எப்படி நடந்தது

எப்படி எப்படி நடந்தது

கர்நாடக அணிக்காக விஜய் ஹாசரே போட்டியில் 2019-20ல் இவர்தான் லீடிங் ரன் ஸ்கோரர். 11 போட்டியில் 609 ரன்கள் குவித்தார். அதேபோல் தியோடர் கோப்பை, சயீத் முஸ்தாக் அலி கோப்பை என்று பல தொடர்களில் கர்நாடக அணிக்காக விளையாடி இருக்கிறார்.

ஆனால்

ஆனால்

ஆனால் இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் கிடையாது. 2000ல் கேரளாவில் இருக்கும் எடப்பால் என்ற ஊரில் பிறந்தவர். அதன்பின் ஹைதராபாத் சென்று அங்கு வளர்ந்தார்.பின் பெங்களூர் சென்று அங்கே செட்டில் ஆனார். பெங்களூர் கர்நாடக கிரிக்கெட் மையத்தில் பயிற்சி பெற்றார். 2014ல் இருந்து இவர் கர்நாடக மாநில அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணியில் கேரள வீரர்கள் இல்லாத நிலையில் இவர் கவனம் ஈர்த்து உள்ளார்.

இன்று போட்டி

இன்று போட்டி

இன்று நடக்கும் போட்டியில் இவர் அடுத்தடுத்து அதிரடி காட்டுகிறார். கோலி இவர் மீது நம்பிக்கை வைத்து கொடுத்த வாய்ப்பை காப்பாற்றி உள்ளார். இதுவரை 42 பந்துகளை சந்தித்த இவர் 56 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதில் 8 பவுண்டரி அடக்கம். பின்ச் உடன் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து பெங்களூருக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.

Story first published: Monday, September 21, 2020, 23:07 [IST]
Other articles published on Sep 21, 2020
English summary
IPL: All you need to know about Devudutt Padikal playing for Royal Challenger today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X