Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கனவுகளோடு வந்த அஸ்வின்.. கலங்க வைத்த "Freak Injury" டைவ்.. இனி மீதி போட்டிகளில் விளையாடுவாரா?

துபாய்: நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி வீரர் அஸ்வினுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குறித்து முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் அஸ்வின் கையில் அடிபட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பஞ்சாப் அணி இவரின் கேப்டனாக இருந்த நிலையில் தற்போது டெல்லிக்கு இவர் மாறி உள்ளார்.

இந்த போட்டியில் அஸ்வின் மிகவும் நன்றாகவே பவுலிங் போட்டு வந்தார். பல நாட்களுக்கு பின் களத்திற்கு வந்தவர் அந்த சுவடே இன்றி விளையாட தொடங்கினார். தனது ஒரே ஓவரில் அவர் பல வேரியேஷன்களை காட்டினார்.

என்ன செம ஓவர்

என்ன செம ஓவர்

ஒரே ஓவர்தான் இவர் போட்டார். ஆனால் அந்த ஓவரிலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். பஞ்சாபின் முக்கியமான கருண் நாயர், நிக்கோலஸ் பூரான் ஆகியோரின் விக்கெட்டை எடுத்தார். 6வது ஓவரை அஸ்வின் வீசினார். அந்த ஓவரின் கடைசியில் அஸ்வின் பந்து வீசிவிட்டு மிட் ஆன் நோக்கி சென்று பந்தை பிடிக்க சென்றார்.

 செம செம பவுலிங்

செம செம பவுலிங்

அந்த பந்தை அவர் பிடிக்காமல் விட்டு இருந்தாலும் எதுவும் நடந்து இருக்காது. ஆனால் மிட் ஆன் நோக்கி சென்ற பந்தை, தாவி பிடிக்க சென்றார். அவர் அப்படி செய்த டைவ்தான் தற்போது அவருக்கு பிரச்சனையாகி உள்ளது. கடந்த ஐபிஎல் தொடர்களில் அஸ்வின் சரியாக விளையாடவில்லை. இதனால் இந்திய அணியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய அணி இந்திய அணி வாய்ப்பு

இந்திய அணி இந்திய அணி வாய்ப்பு

இந்திய அணியில் இவர் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார். இந்த நிலையில் அமீரகத்தில் ஐபிஎல் போட்டி என்றதும் அஸ்வின் கனவுகளோடு வந்தார். அமீரகத்தில் எல்லாம் ஸ்பின் பிட்ச். அதனால் தன்னை நிரூபிக்க இதுவே வாய்ப்பு என்று அஸ்வின் நினைத்தார். இந்த வருடம் பெஸ்ட் ஐபிஎல் பவுலராக அஸ்வின் உருவெடுக்க வாய்ப்புள்ளது என்றும் கூட கணிக்கப்பட்டது.

 ஆனால் ஆனால் என்ன

ஆனால் ஆனால் என்ன

அதேபோல் தான் போட்ட ஒரே ஓவரில் தனது திறமையை அஸ்வின் நிரூபித்தார். ஆனால் அதே ஓவரில் அவர் அடித்த தவறான டைவ் காரணமாக இவர் தோள்பட்டை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. கையில் லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் இவரின் தோள்பட்டை விலகிவிட்டது. இவரை உடனே டெல்லி அணியின் பிசியோ பேட்ரிக் பார்ஹார்ட் சோதனை செய்தார்.

என்ன என்ன நடக்கும்

என்ன என்ன நடக்கும்

இவருக்கு ஏற்பட்ட காயத்தை ''freak shoulder injury'' என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர் இன்னும் சில போட்டிகளில் விளையாட முடியாது என கூறி இருக்கிறார்கள். முழுவதுமாக ஐபிஎல் 2020 தொடரில் விளையாட முடியாது என்று சிலர் மிகைப்படுத்தி கூறி உள்ளனர். ஆனால் அஸ்வின் ''நான் எப்படியும் மீண்டு வந்துவிடுவேன், அடுத்த போட்டியில் விளையாடுவேன்'' என்று கூறியுள்ளார். ஆனால் அஸ்வினின் ஆட்டம் குறித்து பிசியோ பேட்ரிக் பார்ஹார்ட்தான் முடிவு செய்ய வேண்டும்.

Story first published: Monday, September 21, 2020, 15:11 [IST]
Other articles published on Sep 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+