Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்கள் இப்படி செய்திருக்க கூடாது.. கோலி நடந்து கொண்ட விதம்.. குழம்பிப் போன ஏபிடி.. பரபர சம்பவம்!

துபாய்: நேற்று கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி நடந்து கொண்ட விதம் பெரிய சர்ச்சையாகி உள்ளது.

நேற்று பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே பெங்களூர் ஆதிக்கம் செலுத்தியது.

முதலில் களமிறங்கிய பெங்களூர் ஏபிடி அதிரடியால் 194 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய கொல்கத்தா வெறும் 112 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து விராட் கோலியால் அதிரடியாக ஆட முடியவில்லை. எவ்வளவு முயன்றும் அவரால் பெரிய அளவில் ஷாட்களை அடிக்க முடியவில்லை. ஒரு பக்கம் டி வில்லியர்ஸ் 33 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இதில் 6 சிக்ஸர், 5 பவுண்டரி அடக்கம். ஆனால் கோலி நேற்று பெரிதாக எந்த ஷாட்டும் அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்தார்.

திணறினார்

திணறினார்

நேற்று 8வது ஓவரில் பேட்டிங் இறங்கிய கோலி 19வது ஓவர் வரை ஒரு பவுண்டரி அடிக்க முடியாமல் திணறி வந்தார். 28 பந்தில் கோலி 33 ரன்கள் எடுத்தார். இதில் தான் சந்தித்த 25வது பந்தில்தான் முதல் பவுண்டரி அடித்தார். 8வது ஓவரில் பேட்டிங் இறக்கிவிட்டு கடைசியாக 19வது ஓவரில்தான் முதல் பவுண்டரி அடித்தார்.

அதுவரை என்ன செய்தார்

அதுவரை என்ன செய்தார்

அதுவரை கோலி ஸ்டிரைக் மட்டும் ரொட்டேட் செய்து கொண்டு இருந்தார். தன்னால் அடிக்க முடியவில்லை என்று தெரிந்ததும் டி வில்லியர்ஸுக்கு ரொட்டேஷன் கொடுத்தார். சிங்கிள் அடித்துவிட்டு டி வில்லியர்ஸுக்கு பேட்டிங் கொடுத்தார். வரிசையாக சிங்கிள் அடித்து டென்ஷன் ஆனவர் 19வது ஓவரில் பவுண்டரி அடித்தார். அதுவும் அவர் சுயமாக அடிக்கவில்லை.. பந்து வந்த வேகத்தில் எட்ஜ் ஆகி பவுண்டரி சென்றது.

என்ன செய்தார்

என்ன செய்தார்

இப்படி பவுண்டரி அடித்த பின் கோலி முஷ்டியை முறுக்கி.. கையை உயர்த்தி கொண்டாடினார். செஞ்சுரி அடித்துவிட்டு கத்துவது போல உற்சாகத்தில் கத்தினார். அவர் ஏன் இப்படி ஒரே ஒரு பவுண்டரி அடித்துவிட்டு கத்துகிறார் என்று டி வில்லியர்ஸ் குழப்பம் அடைந்தார் . அருகில் வந்து பாசமாக தலையில் தட்டிக் கொடுத்தார்.

கிண்டல்

கிண்டல்

ஒரே ஒரு பவுண்டரி அடித்துவிட்டு கோலி இப்படி கொண்டாடியதை பலரும் கிண்டல் செய்துள்ளனர். நீங்கள் எல்லாம் இப்படி செய்ய கூடாது கோலி. நீங்கள் பெரிய வீரர். ஒரே ஒரு பவுண்டரி அடித்துவிட்டு..ஸ்ரீசாந்த் சிக்ஸ் அடித்தது போல அதை தேவையில்லாமல் கொண்டாட கூடாது கோலி என்று கிண்டல் செய்துள்ளனர்.

Story first published: Wednesday, October 14, 2020, 13:55 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+