Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 ஓவர்களில் 81 ரன்.. ஈவு இரக்கமே இல்லையா.. அறிமுகமான அயர்லாந்து பவுலரை கதற விட்ட வெஸ்ட் இண்டீஸ்

நார்தர்ன் அயர்லாந்து: அயர்லாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் லியாம் மெக்கார்த்தி டி20 வரலாற்றிலேயே இரண்டாவது மிக மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இதுவே அவரது முதல் சர்வதேச அறிமுகப் போட்டி ஆகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமானார் லியாம் மெக்கார்த்தி. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நார்தர்ன் அயர்லாந்து நகரில் நடைபெற்ற டி20 போட்டியில் அவர் அறிமுகமானார். தனது முதல் சர்வதேச போட்டியிலேயே மறக்க முடியாத படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.

Ireland T20 Cricket West Indies Bowling t20 record

நான்கு ஓவர்களில் 81 ரன்களை விட்டுக் கொடுத்து இருக்கிறார் லியாம் மெக்கார்த்தி. இதுவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு பவுலர் விட்டுக்கொடுத்த அதிக ரன்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஐந்தாவது ஓவரில் லியாம் மெக்கார்த்தி அறிமுகம் செய்யப்பட்டார்.

அவர் வீசிய முதல் இரண்டு பந்துகளில் ஷாய் ஹோப் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். அதன் பிறகு, நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துகளில் இரண்டு ஃபோர் அடித்தார் ஈவின் லீவிஸ். அவரது முதல் ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியால் 21 ரன்கள் சேர்க்கப்பட்டது.

அவரது இரண்டாவது ஓவரில் ஒரு சிக்ஸ் மற்றும் 3 ஃபோர்களை அடித்தார் ஈவின் லீவிஸ். அதே ஓவரின் கடைசி பந்தில் ஷாய் ஹோப் ஒரு ஃபோர் அடித்தார். அந்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 24 ரன்கள் எடுத்தது. அடுத்து அவரது மூன்றாவது ஓவரில் 18 ரன்கள் சென்றது. அவரது கடைசி ஓவரில் ஒரு ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம் நான்கு ஓவர்களில் 81 ரன்களை வாரி இறைத்தார் லியாம் மெக்கார்த்தி .

இதற்கு முன், காம்பியா நாட்டைச் சேர்ந்த மூசா ஜோபர்டே 4 ஓவர்களில் 93 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இந்த மோசமான சாதனையை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர் செய்திருந்தார். இதுவே சர்வதேச டி20 கிரிக்கெட்டின் மோசமான பந்துவீச்சாக உள்ளது. தற்போது அயர்லாந்து அணியின் லியாம் மெக்கார்த்தி நான்கு ஓவர்களில் 81 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டாவது மோசமான டி20 பந்துவீச்சுப் பதிவை செய்திருக்கிறார்.

இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக ஆடியது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. அடுத்த ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Story first published: Monday, June 16, 2025, 9:32 [IST]
Other articles published on Jun 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+