Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IRE vs WI: ஏபி டிவில்லியர்ஸ்-இன் மாபெரும் ODI சாதனையை சமன் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் மேத்யூ ஃபோர்ட்

டப்ளின்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் மேத்யூ ஃபோர்ட், ஏபி டி வில்லியர்ஸ்-இன் அதிவேக ஒருநாள் போட்டி அரை சதம் சாதனையை முறியடித்துள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் 16 பந்துகளில் அரை சதம் அடித்ததன் மூலம், 2015 ஆம் ஆண்டு ஏபி டி வில்லியர்ஸ் செய்து இருந்த சாதனையை சமன் செய்திருக்கிறார்.

அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் முதல் போட்டியில் அயர்லாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், இரண்டாவது போட்டி டப்ளின் நகரில் நடைபெற்றது.

IRE vs WI ODI Matthew Forde Equals AB de Villiers Fastest ODI Fifty Record

இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் மூன்றாம் வரிசை வீரர் கேசி கார்டி அதிரடியாக 109 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஷாய் ஹோப் 49 ரன்கள் சேர்த்தார். ஜஸ்டின் கிரீவ்ஸ் 36 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார்.

அதன் பிறகு, எட்டாம் வரிசையில் களமிறங்கிய மேத்யூ ஃபோர்ட் 16 பந்துகளில் அரை சதம் அடித்தார். பின்னர் 19 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் 2 ஃபோர் மற்றும் 8 சிக்ஸர்களை அடித்து இருந்தார். அவர் எடுத்த 58 ரன்களில் 56 ரன்கள் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டு ஏபி டி வில்லியர்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிவேக ஒருநாள் போட்டி சதம் அடித்திருந்தார். அப்போது அவர் 16 பந்துகளில் அரை சதத்தைக் கடந்திருந்தார். சுமார் 10 ஆண்டுகளாக எந்த ஒரு பேட்ஸ்மேனும் ஏபி டி வில்லியர்ஸ்-இன் அந்த சாதனையை நெருங்கவில்லை.

இந்த நிலையில், மேத்யூ ஃபோர்ட் 16 பந்துகளில் அரை சதம் அடித்து அந்த சாதனையை சமன் செய்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் குறைந்த பந்துகளில் அரை சதம் கடந்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் வரிசையில் சனத் ஜெயசூர்யா இருக்கிறார். அவர் 1996 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 17 பந்துகளில் அரை சதம் கடந்திருந்தார். அந்த சாதனையை இன்றளவிலும் மூன்றாவது இடத்தில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. ஒன்பதாம் வரிசையில் களமிறங்கிய குடகேஷ் மூட்டி 8 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்திருந்தார். முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிரடியாக விளையாடி இருந்தனர்.

Story first published: Friday, May 23, 2025, 21:46 [IST]
Other articles published on May 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+