Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுல்ட் ஆகியும் பெயில்ஸ் கீழே விழாததால் தப்பிய பேட்ஸ்மேன்..! ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர்கள் ஷாக்

பிரிஸ்பேன்: ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு எதிரான போட்டியில் அயர்லாந்துக்கு ஒரு அதிருஷ்டம் அடித்தது பார்க்கலாம். அந்த அதிருஷ்ட வாய்ப்பால் எமிரேட்ஸ் வீரர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டனர்.

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 278 ரன்கள் குவித்துள்ளது. இரண்டாவதாக பேட்டிங் செய்த அயர்லாந்து நிதான தொடக்கத்தை கொடுத்தது.

11வது ஓவரை ஜாவீத் வீசினார். 10. 4வது பந்தில் அயர்லாந்தின் இடது கை பேட்ஸ்மேன், எட் ஜாய்ஸ் பேட்டிங் செய்தார். ஜாவீத் வீசிய பந்து பேட்டின் இடைவெளியில் ஊடுருவி ஸ்டம்பில் சென்று தாக்கியது.

ஸ்டம்பில் பந்து பட்டதும், அது ஒளிரவும் ஆரம்பித்தது. இதனால், ஜாவித் மற்றும் சக வீரர்கள் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அப்போதுதான் தெரிந்தது, ஸ்டம்பில் இருந்து பெயில்ஸ் எதுவுமே கீழே விழவில்லை என்பது. அவ்வளவுதான் ஏமாற்றமடைந்து முகத்தை தொங்கபோட்டனர் எமிரேட்ஸ் வீரர்கள்.

இதற்கு அடுத்த பந்தை எட் ஜாய்ஸ், பவுண்டரிக்கு விரட்ட கடுப்பாய்விட்டார் பந்து வீச்சாளர் ஜாவித். இப்படியும் ஒரு அதிருஷ்டமா என்று அயர்லாந்து ரசிகர்கள் வியந்தனர். ஆனால் அந்த அதிருஷ்டம் சிறிது நேரம்தான் நீடித்தது. 18.4வது ஓவரில், அதே ஜாவீத் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பாட்டீலிடம் கேட்ச் கொடுத்து 37 ரன்களுக்கு ஜாய்ஸ் அவுட் ஆனார்.

Story first published: Wednesday, February 25, 2015, 15:07 [IST]
Other articles published on Feb 25, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+