இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து வெற்றி
பெல்பாஸ்ட் : ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை அயர்லாந்து 2-0 என்ற கணக்கில் வென்றது.

அதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி பெல்பாஸ்டில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை மட்டுமே எடுத்தது. முரதக்ஹ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதனை தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 43.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அயர்லாந்து அணியின் பல்பிரனே 60 ரன்களை எடுத்தார். சிமி சிங் கடைசி நேரத்தில் பொறுப்புடன் விளையாடி அயர்லாந்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சம நிலையில் உள்ளன.
இந்த போட்டி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் பங்கு பெற்ற 100ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Thursday, August 30, 2018, 16:59 [IST]
Other articles published on Aug 30, 2018


Click it and Unblock the Notifications