Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"55-45".. 6 விக்கெட் வித்தியாசம் - WTC ஃபைனல் ரிசல்ட்.. இப்போதே கணித்த "பலே" எக்ஸ்பெர்ட்ஸ்

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து இர்பான் பதானும், ஸ்காட் ஸ்டைரிஸும் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், நியூஸி.,க்கு எதிரான இந்திய பிளேயிங் லெவனில் இடம் பிடிக்கப் போகும் வீரர்கள் யார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இங்கிலாந்து தொடரை விட, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மீதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில், இது முதன் முதலில் நடக்கும் சீரிஸ் என்பதால் தான்.

 பெஸ்ட் ஸ்குவாட்

பெஸ்ட் ஸ்குவாட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வீரர்கள் பட்டியலில், ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், மாயங்க் அகர்வால், புஜாரா, அஜின்க்யா ரஹானே, ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் பட்டேல், ஜஸ்ப்ரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷரதுல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

 55 - 45

55 - 45

இதில், இரு வெற்றி வாய்ப்பு குறித்து பல சீனியர் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறுகையில், "டெஸ்ட் போட்டிகளிலேயே இதுவரை இல்லாத அளவுக்கான மிகப்பெரிய டெஸ்ட் மேட்ச் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டி தான். இதில், நியூசிலாந்து அணிக்கு 55 சதவிகிதம் வெற்றி வாய்ப்பும், இந்தியாவுக்கு 45 சதவிகிதம் வெற்றி வாய்ப்பும் உள்ளது. இதில், கேன் வில்லியம்சன் தான் அதிக ரன் குவிக்கும் வீரராக இருப்பார் என்று நினைக்கிறேன். அதேபோல், பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட் மற்றும் முகமது ஷமி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றுவார்கள் என்பதே என் கணிப்பு" என்று கூறியுள்ளார்.

 டிரெண்ட் போல்ட்

டிரெண்ட் போல்ட்

அதேபோல், நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறுகையில், "இப்போட்டியில் நியூசிலாந்து வெற்றிப் பெறும். அதுவும், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற வாய்ப்புள்ளது. இதில், டெவோன் கான்வே அதிக ரன்களையும், டிரெண்ட் போல்ட் அதிக விக்கெட்டுகளையும் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.

 பிரெஷ்ஷாக களமிறங்கும் இந்தியா

பிரெஷ்ஷாக களமிறங்கும் இந்தியா

சீனியர் வீரர்கள் கூறுவது போல் நியூசிலாந்துக்கு அதிக சான்ஸ் இருப்பதாகவே கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுகின்றனர். காரணம், நியூசிலாந்து இப்போது இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதன் மூலம், அவர்கள் இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ப தங்களை நிச்சயம் ட்யூன் செய்துவிடுவார்கள். ஆனால், பிரெஷ்ஷாக வந்து களமிறங்கும் இந்திய அணி, இங்கிலாந்தில் செட் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ள நேரிடும் என்பதால், நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்கின்றனர்.

Story first published: Tuesday, June 8, 2021, 19:36 [IST]
Other articles published on Jun 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+