Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின், சேவாக் கைவிட்டாலும் நான் இருக்கேன்.. வெறியாட்டம் ஆடிய ஆல்-ரவுண்டர்.. இந்தியா அதிரடி வெற்றி!

மும்பை : இந்தியா லெஜண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி சாலை பாதுகாப்பு டி20 தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

Recommended Video

Road Safety T20 series | IND vs SL | Irfan Pathan helps made India Legends to win

இந்தப் போட்டியில் இந்தியா 139 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்ட கடுமையாக போராடியது.

இலங்கை அணியின் கைகளில் இருந்த போட்டியை, இரண்டே ஓவர்கள் தட்டிப் பறித்தார் இர்பான் பதான்.

சாலை பாதுகாப்பு டி20 தொடர்

சாலை பாதுகாப்பு டி20 தொடர்

சாலை பாதுகாப்பு டி20 தொடரில் ஐந்து நாடுகளை சேர்ந்த ஜாம்பவான் வீரர்கள் ஐந்து அணிகளாக ஆடி வருகின்றனர். இந்தியா லெஜண்ட்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியையும், இலங்கை லெஜண்ட்ஸ் அணி, ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்தி இருந்தன.

முன்னணி நட்சத்திரங்கள்

முன்னணி நட்சத்திரங்கள்

இந்த இரண்டு அணிகளும் செவ்வாய் அன்று நடந்த போட்டியில் சந்தித்தன. இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், சேவாக், யுவராஜ் சிங், ஜாகிர் கான் என பல முன்னணி நட்சத்திரங்கள் இடம் பெற்றனர். இலங்கை அணியில் தில்ஷன், சமிந்தா வாஸ் ஆடினர்.

இலங்கை அணி பேட்டிங்

இலங்கை அணி பேட்டிங்

இந்திய அணியின் கேப்டன் சச்சின் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கு தில்ஷன் - கலுவிதரானா முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தனர்.

ஹெராத் அதிரடி

ஹெராத் அதிரடி

தில்ஷன் 23 ரன்களும், கலுவிதரானா 21 ரன்களும் எடுத்தனர். அதன் பின் சீரான இடைவெளியில் இலங்கை அணி விக்கெட்களை இழந்தது. காபுகேத்ரா 23 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில், கடைசி மூன்று பந்துகளை சந்தித்த, பத்தாம் வரிசை வீரர் ரங்கனா ஹெராத் மூன்று பவுண்டரி அடித்து அசத்தினார்.

முனாப் பட்டேல்

முனாப் பட்டேல்

இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் முனாப் பட்டேல் நான்கு விக்கெட்கள் வீழ்த்தி மிரட்டினார். இந்திய அணி 139 ரன்கள் என்ற எளிய இலக்குடன் சேஸிங் செய்ய களமிறங்கியது.

சமிந்தா வாஸ் மிரட்டல்

சமிந்தா வாஸ் மிரட்டல்

ஆனால், சமிந்தா வாஸ் தன் மிரட்டல் பந்துவீச்சால் இந்திய அணியை கட்டுப்படுத்தினார். வாஸ் பந்துவீச்சில் முதல் ஓவரிலேயே சச்சின் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து அதிரடி மன்னன் சேவாக் மோசமாக ரன் ஓடி, ரன் அவுட் ஆனார்.

யுவராஜ் சிங் ஏமாற்றம்

யுவராஜ் சிங் ஏமாற்றம்

யுவராஜ் சிங் கை கொடுப்பார் என நினைத்த நிலையில், அவர் 1 ரன்னில் சமிந்தா வாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முகமது கைப் நிதான ஆட்டம் ஆடினார். சஞ்சய் பங்கர் 18 ரன்கள் எடுத்தார். அப்போது இந்தியா ஓவருக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆடியது.

கைப் நிதானம்

கைப் நிதானம்

கைப் 45 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அடுத்து இர்பான் பதான் - மன்ப்ரீத் கோனி ஜோடி சேர்ந்தனர். இவர்கள் ஆட்டமிழந்தால், இந்திய அணி தோல்வியை நோக்கியே செல்லும் என்ற நிலையில், இர்பான் பதான் போட்டியை மாற்றினார்.

பதான் அதிரடி

பதான் அதிரடி

கடைசி 3 ஓவர்களில் 39 ரன்கள் தேவை, ஓவருக்கு 13 ரன்கள் வேண்டும் என்ற நிலையில், இர்பான் பதான் 18வது ஓவரில் வான வேடிக்கை காட்டினார். அந்த ஓவரில் அவர் இரண்டு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். கோனி ஒரு சிக்ஸ் அடித்தார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

ஒரே ஓவரில் 26 ரன்கள் சேர்த்த இந்திய அணி, கடைசி இரு ஓவர்களில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு மாறியது. 19வது ஓவரில் முதல் மூன்று பந்துகளில் ஃபோர் அடித்த இர்பான் பதான், நான்காம் பந்தில் ஒரு ரன் எடுத்து வெற்றிக் கோட்டை எட்டினார்.

காப்பாற்றிய இர்பான் பதான்

காப்பாற்றிய இர்பான் பதான்

இர்பான் பதான் 31 பந்துகளில் 57 ரன்கள் குவித்தால் மட்டுமே இந்திய அணி, இந்தப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி 17 வது ஓவர் வரை சேஸிங்கில் ஆதிக்கம் செலுத்தியும், அதன் பின் இரண்டு மோசமான ஓவர்களால் தோல்வி அடைந்தது.

Story first published: Tuesday, March 10, 2020, 23:36 [IST]
Other articles published on Mar 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+