“தோனி ரெக்கார்ட் எல்லாம் மிக சுலபம்” பண்ட்-காக காத்திருக்கும் மெகா வாய்ப்பு.. யூசஃப் பதான் நம்பிக்கை
பெங்களூரு: தோனியின் சாதனையை தூக்கி சாப்பிடும் அளவிற்கு பண்ட் வளரவுள்ளார் என முன்னாள் வீரர் இர்பான் பதான் அடித்துக்கூறியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா அபார வெற்று பெற்றது.
குறிப்பாக சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 15வது டெஸ்ட் வெற்றியையும், இதுவரை இலங்கையிடம் ஒரு டெஸ்டில் கூட தோற்றதில்லை என்ற ரெக்கார்டையும் பெற்றது.

யார் அந்த நபர்
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் ரிஷப் பண்ட். அதிரடி நாயகனான ரிஷப் பண்ட், இந்த டெஸ்ட் தொடரில் 185 ரன்களை குவித்தார். மேலும் 28 பந்துகளில் அதிவேக சதமடித்து கபில் தேவ்வின் சாதனையை முறியடித்தார். இளம் வீரர் ஒருவர் இப்படி ஆடுவது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

இர்பான் பதான் கருத்து
இந்நிலையில் தோனியின் ஆல் டைம் சாதனையை ரிஷப் பண்ட் விரைவில் முறியடிப்பார் என பதான் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 24 வயதே ஆகும், பண்ட்-ன் கிரிக்கெட்டில் நிறைய முன்னேற்றங்களை பார்த்துள்ளோம். அவர் இன்னும் குறைந்தது அடுத்த 10 வருடங்களுக்கு ஆடுவார்.

இர்பான் நம்பிக்கை
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பண்ட் - க்கு இன்னும் வெகு தூரம் உள்ளது. அவர் தனது கிரிக்கெட் கேரியரை முடிக்கும்போது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையுடன் விடை பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

பிரகாசமாகும் வாய்ப்பு
இர்பான் பதானின் நம்பிக்கைக்கும் பல பிரகாச வாய்ப்புகள் உள்ளன. வெறும் 24 வயது மட்டுமே நிரம்பியுள்ள ரிஷப் பண்ட் இதுவரை பங்கேற்ற 30 டெஸ்ட் போட்டிகளில் 1920 ரன்களை எடுத்து 4-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில்எம்எஸ் தோனி 90 போட்டிகளில் 4,876 ரன்களுடன் உள்ளார். எனவே பண்ட்-ன் கிரிக்கெட் வாழ்க்கை முடியும் போது 8,000 முதல் 10,000 ரன்கள் வரை அடித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications