நேரம் வந்தாச்சு..? கோலியை வீட்டுக்கு அனுப்புங்க... ரோகித்தை கூட்டிட்டு வாங்க..!
Recommended Video
மும்பை: உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா, தோற்றதால் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் டெஸ்ட் அணி வீரர் வாசிம் ஜாபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக கோப்பையில், லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வி அடைந்து புள்ளிகள் பட்டியலில் டாப்பில் இருந்த இந்தியா, அரைறுதியில் நியூசிலாந்திடம் 18 ரன்களில் தோல்வி அடைந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா, கோலி, ராகுல் மிக மோசமாக ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர்.
கோப்பையை வெல்லும் அணியாக வர்ணிக்கப்பட்ட இந்தியா, மிக மோசமாக தோல்வி அடைந்தது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனால், இந்திய அணியில் கேப்டன் கோலியிடம் இருந்து, கேப்டன்ஷிப்பை பறித்து, ரோகித் சர்மாவிடம் வழங்க ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடும் விமர்சனம்
பல்வேறு முன்னாள் ஜாம்பவான்களும், இந்திய அணியின் தோல்வியை விமர்சித்து வருகின்றனர். இந்திய அணி நிர்வாகமும் இது குறித்து கடும் அதிருப்தியில் இருக்கிறது. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

வாசிம் ஜாபர் டுவீட்
இந் நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித்தை நியமனம் செய்யுங்கள் என்று மறைமுகமாக டெஸ்ட் அணி முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கோரி இருக்கிறார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.
நேரம் வந்தாச்சு
அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டதா?, 2023ம் ஆண்டு உலக கோப்பையில் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்த நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

2 அணிகளாக மோதல்
இந்திய அணியின் தோல்விக்கு பிறகு, அணியில் உள்ள வீரர்கள் கோலிக்கும், ரோகித்துக்கும் ஆதரவாக 2 அணிகளாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் கசிந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், வாசிம் ஜாபரின் ட்வீட் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications