Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பண்டியாவை உத்து பாருங்க.. வாயில் புகை வருது.. அப்புறம் எதையோ தூக்கி வீசுறார்.. என்னவா இருக்கும்?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருக்கும் ஹர்திக் பண்டியா புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் ரசிகர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தோனியின் மனைவி சாக்ஷி நேற்று முன்தினம் மும்பையில் பிறந்த நாள் கொண்டாடினார்.

அதில் பண்டியா கலந்து கொண்டார். அப்போது பிறந்தநாள் பார்ட்டியை வீடியோ எடுத்து இணையத்தில் சிலர் பகிர்ந்தனர். அதில் ஒரு வீடியோவில் பண்டியா புகை விடுவது போன்ற காட்சி பதிவாகி உள்ளது.

இந்த நேரத்தில் இப்படி ஒரு வீடியோவா?

இந்திய அணியில் சமீப காலமாக உடற்தகுதி என்பது மிக அதிகம் பேசப்பட்டு வருகிறது. கேப்டன் கோலி முன்பு இருந்ததை காட்டிலும் கடந்த சில வருடங்களில் தன் உடற்தகுதியை பல மடங்கு மெருகேற்றியுள்ளார். மற்ற வீரர்களும் உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்திய அணியில் யோ-யோ தேர்வு உள்ளிட்ட உடற்தகுதி தேர்வுகள் இடம் பெற்றுள்ளன. இந்த சூழ்நிலையில் தான் பண்டியா புகை பிடிப்பது போன்ற காட்சி வெளியாகி உள்ளது.

பார்ட்டியில் பங்கேற்ற பண்டியா

தோனியின் மனைவி சாக்ஷி தோனி நவம்பர் 18 அன்று தன் பிறந்தநாளை கொண்டாடினார். அந்த பார்ட்டியில் இந்திய அணியில் இருந்து பண்டியா மற்றும் ஷர்துல் தாக்குர் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் காயம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகி இருக்கிறார்கள்.

பண்டியா என்ன செய்கிறார்?

பண்டியா இந்த பார்ட்டியில் மிக உற்சாகமாக இருந்தார். பாடல்கள் பாடி அதகளம் செய்தார். அதே சமயம், கேக் வெட்டும் வீடியோவில் தோனிக்கு பின்னே நின்று இருக்கும் பண்டியா, புகையை விட்டு விட்டு கீழே குனிந்து எதையோ போடுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

பண்டியாவை சுட்டிக் காட்டிய ரசிகர்கள்

சாதாரணமாக இந்த காட்சியை அனைவராலும் கவனித்து விட முடியாது. எனினும், சில ரசிகர்கள் இணையத்தில் "இந்த வீடியோவில் பண்டியாவை உற்றுப் பாருங்கள். புகை விடுவது போல உள்ளது" என குறிப்பிடவே, அனைவரும் பண்டியாவை குறி வைத்து பார்க்கத் துவங்கி உள்ளனர்.

அணித் தேர்வில் அழுத்தம் ஏற்படுமா?

அணித் தேர்வில் அழுத்தம் ஏற்படுமா?

புகைப்பது என்பது தனி நபர் சார்ந்த விஷயம். எனினும், தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோவால் இந்திய கிரிக்கெட் அணித் தேர்வில் பண்டியாவிற்கு அழுத்தம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரவி சாஸ்திரி, பண்டியாவை ஆஸ்திரேலியா தொடரில் "மிஸ்" செய்து இருப்பதாக கூறி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அவரை ரொம்ப மிஸ் பண்றோம்.. அவர் வந்தா தான் சரியா இருக்கும்.. ரவி சாஸ்திரி யாரை சொல்றாரு?

Story first published: Tuesday, November 20, 2018, 15:53 [IST]
Other articles published on Nov 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+