For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் சர்மா என்ன என் பொண்டாட்டியா? அவரோட ஓபனிங் பேட்ஸ்மெனாக இறங்குவதற்கு? பொங்கி தள்ளிய அவர்

மும்பை:ரோகித் சர்மா என்ன என் பொண்டாட்டியா? அவருடன் தொடக்க வீரராக நான் களம் இறங்குவதற்கு என்று ஷிகர் தவான் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

இந்திய அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி, பல சாதனைகள் புரிந்தவர் ஷிகர் தவான். அவருடன் ரோகித் சர்மா இணையும் போது அணியின் ரன் ரேட் பலமுறை உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் சிறப்பாக துவக்க ஜோடி என்ற பெயரும் கிடைத்திருக்கிறது.

Is rohit sharma is my wife? says shikhar dhawan

ஆனால், உலக கோப்பை தொடரில் யார் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று தெரியவில்லை. வழக்கம் போல... தவானும், ரோகித் சர்மாவும் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் வேறு,வேறு அணிக்காக களம் இறங்கினார்கள்.

இந்நிலையில், ரோகித் சர்மா என் பொண்டாட்டியா? அவருடன் உலக கோப்பை தொடரில் நான் களம் இறங்குவதற்கு என்ற தவான் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:உலக கோப்பை தொடரில், துவக்க வீரர் யார் இருந்தாலும் கவலை இல்லை.

எப்போதும் ரோகித் சர்மாவுடன் இணைந்து தான் ஆட்டத்தை துவக்குவேன் என்று எதிர்பார்ப்பது கிடையாது. அவர் என்ன எனது மனைவியா? வேறு வீரர் வந்தாலும் அவருடன் ஆடவேண்டும்.

பிருத்வி ஷா உடன் விளையாடு என்று சொன்னாலும் நான் ரெடி. குறிக்கோள் ஒன்றுதான். ஒருவர் அடித்து ஆடினால், மற்றொருவர் மெதுவாக ஆடி அவருக்கு ஊக்கம் தர வேண்டும். ஒருவர் மெதுவாக அவருக்கு சப்போர்ட் செய்து ஆட வேண்டும்.

அணியில் எப்பொழுது நன்றாக விளையாடினாலும் சரி.. விளையாடா விட்டாலும் சரி... அதை பற்றி கவலைப்பட மாட்டேன். பொறுப்பை உணர்ந்து எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படுவேன் என்றார்.

Story first published: Wednesday, May 15, 2019, 14:49 [IST]
Other articles published on May 15, 2019
English summary
Is rohit sharma is my wife? says shikhar dhawan.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+