Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருநாள் தொடரிலும் ரோகித் சர்மா இல்லையா?.. அவசர அவசரமாக நடந்த டீம் மீட்டிங்.. அடுத்த கேப்டன் யார்?

செஞ்சூரியன்: ரோகித் சர்மாவின் உடற்தகுதி விஷயம் குறித்து இந்திய அணிக்குள் அவசர ஆலோசனை ஒன்று நடைபெற்றுள்ளது.

Recommended Video

Rohit Sharma's injury status unclear, KL Rahul to lead in ODIs vs South Africa ? | Oneindia Tamil

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணியின் முக்கிய வீரரான ரோகித் சர்மா விலகிய நிலையில் கே.எல்.ராகுல் முழு பொறுப்பை ஏற்று விளையாடி வருகிறார்.

ரோகித் உடல்நிலை

ரோகித் உடல்நிலை

விராட் கோலி உடனான மனக்சப்பு காரணமாக தான் ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. பின்னர் ககையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு பிரச்சினை காரணமாக தான் விலகினார் என ரோகித் சர்மா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் ஒருநாள் தொடரில் நிச்சயம் கலந்துகொள்வார் எனக்கூறப்பட்டது.

அவசர கூட்டம்

அவசர கூட்டம்

இந்நிலையில் ரோகித் சர்மாவின் உடல்நிலை குறித்து இந்திய அணிக்குள் அவசர மீட்டிங் நடைபெற்றுள்ளது. ரோகித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் உடற்தகுதியை மேம்படுத்தி வருகிறார். அவருக்கு பாதிப்பு இன்னும் இருப்பதால் ஒருநாள் தொடரிலும் பங்கேற்பது சந்தேகமே எனக்கூறப்பட்டுள்ளது. 50 ஓவர் அணியின் கேப்டனே இல்லாததால், அடுத்ததாக யாரை கேப்டனாக நியமிக்க இந்த கூட்டம் நடந்துள்ளது.

பதவி யாருக்கு

பதவி யாருக்கு

ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக விராட் கோலி தான் அணிக்குள் அனுபவமும், சீனியராகவும் உள்ளார். ஆனால் அவரிடம் கேப்டன்சி ஒப்படைக்கவில்லை. கே.எல்.ராகுல் தான் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ராகுலுடன் இணைந்து விராட் கோலி அறிவுரைகள் கூறவுள்ளார்.

 டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது வரை இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸில் 272 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. இதில் துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார்.

Story first published: Monday, December 27, 2021, 21:59 [IST]
Other articles published on Dec 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+