பக்கா ரெடி.. இங்கிலாந்தில் மீண்டும் ஐபிஎல்.. 'அந்த' உத்தரவு மட்டும் பாக்கி - செம மேட்டர்

மும்பை: பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 தொடர் மீண்டும் இங்கிலாந்தில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே இருந்த சூழலில், அங்கு அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சத்தில் உள்ளது. தினம் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் இறந்து வருகின்றனர்.

சச்சின் விக்கெட்.. காலி செய்த அக்தர்.. கொண்டாடிய கொல்கத்தா - கிரிக்கெட்டின் 'விசித்திர' தருணம்சச்சின் விக்கெட்.. காலி செய்த அக்தர்.. கொண்டாடிய கொல்கத்தா - கிரிக்கெட்டின் 'விசித்திர' தருணம்

காலை கண் விழிப்பது முதல், இரண்டு கண் மூடுவது வரை கொரோனா... கொரோனா... மட்டுமே. இதற்கிடையே, ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்த ஒரே விஷயம் ஐபிஎல் 2021. ஆனால், அங்கும் பயோ-பபுளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த கொரோனா, கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தியை போட்டுத் தாக்க, அதன் பிறகு பல வீரர்களுக்கும் தொற்று ஏற்பட, 'போதும்டா சாமி.. முடியல' என்று தேதி குறிப்பிடாமல் தொடரை ஒத்தி வைத்தது பிசிசிஐ.

ஐபிஎல் 2021

ஐபிஎல் 2021

இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருப்பதால், இங்கு மீண்டும் ஐபிஎல் தொடங்க வாய்ப்பே இல்லை. பிசிசிஐ தலைவர் கங்குலியும் 'இப்போதைக்கு இந்தியாவில் வாய்ப்பில்லை' என்று உறுதிப்படுத்திவிட்டார். அதேசமயம், மற்ற நாட்டின் கிரிக்கெட் வாரியங்களுடன், பிசிசிஐ தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கொரோனா தாக்கம் குறைவாக நாடுகளின் வாரியங்களிடம் பேசி வருகிறது. இதற்கிடையே, 'நாங்கள் ஐபிஎல் தொடரை நடத்தித் தருகிறோம்' என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஆனால், அங்கு தினசரி தொற்று எண்ணிக்கை 3000 கடந்து சென்றுக் கொண்டிருப்பதால், இலங்கை ஆப்ஷனும் கைவிடப்பட்டது.

அங்கயா இங்கயா?

அங்கயா இங்கயா?

அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்த வாய்ப்புள்ளதாக தொடர்ந்து செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. கடந்த 2020 ஐபிஎல் சீசன் போதும், கொரோனா தொற்று காரணமாக, யுஏஇ-யில் ஐபிஎல் நடத்தப்பட்டது போல, இந்தாண்டு அங்கு நடத்தலாம் என்று முணுமுணுக்கப்பட்டது. கடந்த சீசனில், அமீரக நிர்வாகமும், பிசிசிஐ-யுடன் நன்கு ஒத்துழைத்தது. அதையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தல், அமீரகத்தில் தொடரை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மிட்-செப்டம்பர்

மிட்-செப்டம்பர்

இது எல்லாவற்றையும் ஒருபக்கம் எடுத்து வைத்துவிட்டு, ஐபிஎல் நடத்த மற்றொரு அருமையான ஆப்ஷன் எதுவென்று பார்த்தால் இங்கிலாந்து தான். செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதி தான் இங்கிலாந்தின் சொர்க்க காலக்கட்டமாகும். மிதமான சீதோஷ்ணம், விளையாடுவதற்கு ஏற்ற சூழல் என்று காலநிலை அட்டகாசமாக இருக்கும். இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனும் இதைத் தான் தெரிவித்திருந்தார். மான்செஸ்டர், லீட்ஸ், பிர்மிங்காம், லண்டனில் உள்ள இரு ஸ்டேடியம் என்று மொத்தம் ஐந்து இடங்களில் அருமையாக போட்டிகளை நடத்தலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்கும் சூழலும் உள்ளது

கங்குலி ஒப்புதல் அளிப்பாரா?

கங்குலி ஒப்புதல் அளிப்பாரா?

பிசிசிஐ இந்த அனைத்து சாதக அம்சங்களையும் ஆராய்ந்து வருகிறது. தொடர்ந்து, இங்கிலாந்து நிர்வாகத்துடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அங்கு வைரஸ் பாதிப்பு கடந்த சில தினங்களாக மைல்டாக அதிகரித்து வருகிறது. அதையும், பிசிசிஐ கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும் என்று தெரிகிறது. பிசிசிஐ தலைவர் கங்குலியின் ஒப்புதல் மட்டுமே பாக்கி. அப்படி ஒருவேளை பிசிசிஐ ஒப்புக் கொண்டால், உலகக் கோப்பை டி20 தொடருக்கு பிறகு, ஐபிஎல் இங்கிலாந்தில் கன்ஃபார்ம். யோசிச்சுப் பாருங்க, லார்ட்ஸில் தோனி சிக்ஸரை பறக்க விட்டா எப்படி இருக்கும்?

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ipl 2021 remaining matches at UK - இங்கிலாந்து ஐபிஎல் 2021
Story first published: Friday, May 14, 2021, 15:00 [IST]
Other articles published on May 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X