Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்சர்.. சிக்சராக அடித்த ருத்துராஜ்.. அதிரடி காட்டும் இஷான் கிஷன்.. வீணான பெவுமா திட்டம்

டெல்லி: தென்னாப்பிரிக்காக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

கேப்டனாக முதல் போட்டியில் களமிறங்கிய ரிஷப் பண்ட், டாஸை இழந்தாலும், பேட்டிங் முதலில் செய்வதில் கஷ்டம் ஏதுமில்லை என்று கூறி இருந்தார்.

என்ன முதல் போட்டியில் இவ்வளவு உத்வேகமாக பேசுகிறாரே என்று ரசிகர்களும் ஆச்சரியப்பட்டனர். அதற்கு காரணம் பிறகு தான் தெரிந்தது.

சொதப்பிய பிளான்

சொதப்பிய பிளான்

தென்னாப்பிரிக்க அணி கேசவ் மகராஜ் மற்றும்தப்ரைஸ் சாம்ஷியை வைத்து களமிறங்கியது. இதனால் முதல் ஓவரிலேயே கேசவ் மகராஜை வைத்து முதல் ஓவரை பெவுமா வீசினார். சுழற்பந்துவீச்சில் இந்திய வீரர்கள் திணறுவார்கள் என எதிர்பார்த்த பெவுமாக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதல் ஓவரில் 13 ரன்கள் அடிக்கப்பட்டது.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

இதனால், சுழற்பந்துவீச்சை மாற்றி வேகப்பந்துவீச்சாளர்களை பெவுமா அழைத்தார். முதலில் இருவரும் தடுமாறினாலும், பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ருத்துராஜ், சிக்சர்களை விரட்டினார். மறுபக்கம் பவுண்டரிகளை இஷான் கிஷன் விளாசியதால், பவர் பிளேவில் இந்திய அணி 51 ரன்கள் அடித்தது.

பறந்த சிக்சர்கள்

பறந்த சிக்சர்கள்

பானேல் வீசிய பந்தை , ருத்துராஜ் அடிக்க அதனை பிரிட்டோரியஸ் கேட்ச்சை தவறவிட பந்து சிக்சருக்கு சென்றது. எனினும் அடுத்த பந்திலேயே ருத்துராஜ் அவுட் ஆனார். ருத்துராஜ் அடித்த 23 ரன்களில் 3 சிக்சர்கள் அடங்கும். இதன் பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும், தொடக்கம் முதலே தனது அதிரடியை காட்டினார். குறிப்பாக சுழற்பந்துவீச்சை சிக்சருக்கு பறக்கவிட்டார்.

இஷான் கிஷன் அதிரடி

இஷான் கிஷன் அதிரடி

மறுபக்கம், இஷான் கிஷன் அதிரடியை காட்ட 37 பந்தில் இஷான் கிஷன் அரைசதம் விளாசினார். இதன் மூலம் 9.4வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை தொட்டது. தொடர்ந்து சிக்சர்களை விளாசிய இஷான் கிஷன் 48 பந்துகளில் 76 ரன்கள் அடித்தார். இதில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர் அடங்கும். டெல்லி மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் அடிக்கும் நோக்கில் விளையாடி வருகின்றனர்.

Story first published: Thursday, June 9, 2022, 20:36 [IST]
Other articles published on Jun 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+