Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK - 3 பேருக்கு ஒரே ஆப்பு வைத்த இசான் கிஷன்.. ஒரே இன்னிங்சால் ராகுல் கதை முடிந்தது

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் இசான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி இருக்கிறார்கள். இதன் மூலம் இந்திய அணி 267 ரன்களை இலக்காக பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.

டாஸ் வென்று முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. இதில் ரோகித் சர்மா, கில், விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர் என டாப் நான்கு வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க இந்திய அணி 66 ரன்கள் எடுத்து தடுமாறியது.

Ishan kishan cemented his place for world cup by splendid innings vs pakistan

அப்போது களத்திற்கு வந்த இசான் கிசன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி அதிரடியாக விளையாடி இந்திய அணியை காப்பாற்றியது. குறிப்பாக இசான் கிசன் தற்போது மாற்று வீரராக தான் அணிக்குள் வந்திருக்கிறார். கே.எல் ராகுல் காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக விளையாட இஷான் கிஷன் தற்போது நெருக்கடியான கட்டத்தில் ஒரு சூப்பரான இன்னிங்சை விளையாடி இருக்கிறார்.

இதன் மூலம் கே எல் ராகுல் மீண்டும் அணிக்குள் வருவது கடினமாக மாறிவிட்டது. மேலும் இசான் கிஷன் டாப் ஏழு வரிசையில் இரண்டாவது இடது கை பேட்ஸ்மேன் என்பதால் அது கூடுதல் சாதகமாக இருக்கிறது. தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக தன்னுடைய வாழ்நாள் சிறந்த இன்னிங்ஸில் ஒன்றை இஷான் கிஷன் ஆடிவிட்டார். இதனால் தற்போது இஷான் கிசனை அணியை விட்டு நீக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக கேஎல் ராகுல் அணிக்குள் எப்படி வருவார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று மாற்று விக்கெட்டு கீப்பராக சஞ்சு சாம்சன் இடம்பெற வேண்டும் என அவருடைய ரசிகர்கள் வலியுறுத்திய நிலையில் அவர்களுடைய வாயும் இசான் கிசன் அடைத்துவிட்டார். ஒருவேளை கே எல் ராகுல் அணிக்கு கண்டிப்பாக தேவை என்றால் ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றி விடுவார்கள்.

இதனால் தன்னுடைய ஒரே இன்னிங்ஸ் மூலம் உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கு இசான் கிஷன் தன்னுடைய இடத்தை ரிசர்வ் செய்து விட்டதாக கிரிக்கெட் விமர்சனம் கருதுகின்றனர். ஆனால் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்த பிறகு அடுத்த போட்டியிலே அவர் நீக்கப்பட்ட கொடுமையும் நடந்திருக்கிறது. இதனால் அணி நிர்வாகம் என்ன செய்வது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, September 2, 2023, 20:25 [IST]
Other articles published on Sep 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+