Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: அப்படிப்போடு.. பயங்கரமான சாதனையா இருக்கே.. தோனி ரெக்கார்டை சமன் செய்த இஷான் கிஷன்!

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் அரைசதம் விளாசிய இந்திய வீரர் இஷான் கிஷன் அசத்தல் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணியின் வெற்றியையும் விடவும் முகேஷ் குமார், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன் ஆகியோரின் சிறந்த ஆட்டமே இந்திய அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இஷான் கிஷனின் ஆட்டம் இந்திய அணிக்கு மட்டுமல்லாமல், அவரது கிரிக்கெட் வாழ்க்கையிலும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

Ishan Kishan joins with Ms Dhoni in the List of scoring Fifties in all 3 Matches of a Bilateral Series

இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமாக ஆடிய முதல் இரு போட்டிகளிலும் சிறப்பாக ஆடிய இஷான் கிஷன், அதிரடியாக அரைசதத்தையும் விளாசி இருக்கிறார். முதல் போட்டியில் 55 ரன்களும், இரண்டாவது போட்டியில் 51 ரன்களும், 3வது போட்டியில் 77 ரன்களும் விளாசி இஷான் கிஷன் அசத்தியுள்ளார். இதன் மூலம் மொத்தமாக 3 போட்டிகளில் 184 ரன்கள் விளாசி தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றுள்ளார். இதன் மூலம் இஷான் கிஷனின் ஆட்டம் ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இஷான் கிஷன் அசத்தல் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இதுவரை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 3 போட்டிகளிலும் அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இஷான் கிஷன் 6வது வீரராக இணைந்துள்ளார். இதில் முதலிடத்தில் ஸ்ரீகாந்த், திலீப் வெங்சர்கார், முகமது அசாருதீன், தோனி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு பின் இஷான் கிஷன் இணைந்துள்ளார்.

Ishan Kishan joins with Ms Dhoni in the List of scoring Fifties in all 3 Matches of a Bilateral Series

2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நட்சத்திர வீரராக இருந்த தோனி, 3 போட்டிகளிலும் அரைசதம் விளாசினார். கடைசி வரை தோனியின் விக்கெட்டை ஆஸ்திரேலிய வீரர்களால் வீழ்த்த முடியவில்லை. அதேபோல் 2020ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளில் கொண்ட ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரும் ஹாட்ரிக் அரைசதம் விளாசி சாதனை படைத்தார். இந்த பட்டியலில் இஷான் கிஷனும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, August 2, 2023, 10:09 [IST]
Other articles published on Aug 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+